தங்கம், வெள்ளி, பணம் - இதைதான் கொள்ளை அடிப்பார்கள் என்று நினைத்திருப்போம். ஆனால், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரூ.17 லட்சம் கேட்பரி சாக்லேட் (Cadbury chocolate) கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் 150 பெட்டிகளில் இருந்த கேட்பரி சாக்லேட் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லன்கோவில் உள்ள சாக்லேட் குடோனில் இருந்து திருடர்கள் சி.சி,டி.வி. கேமராக்களை அகற்றிவிட்டு அங்கிருந்த சாக்லேட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 


இதுகுறித்து கேட்பரி சாக்லேட் விநியோகஸ்தர் ராஜேந்திர சிங் சித்து சாக்லேட் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார், இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்துவருகின்றனர். சாக்லேட் குடோனில் இருந்து சி.சி.டி.வி. கேமராவையும் கொள்ளையர்கள் நீக்கிவிட்டால், யார் சாக்லேட்களை கொள்ளையடித்துள்ளனர் என தேடும் பணி சவால் மிகுந்ததாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


சாக்லேட்களை கொள்ளையடித்து சென்றவர்கள் அதை என்ன செய்வார்கள்? அவ்வளவு சாக்லேட்களையும் அவர்கள் விற்பனை செய்வார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. லக்னோவில் உள்ள குடோனில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சாக்லேடின் மதிப்பு ரூ.17 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.














 




1. ஜெர்மனி


2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், ஜெர்மனியில் உள்ள கடையில் இருந்து 20 டன் சாக்லேட் மற்றும் நியூட்டல்லா கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த திருட்டில் டிரக் அல்லது லாரி மூலம் கொள்ளையர்கள் சாக்லேட்டை திருடி சென்றிருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 37 லட்சம் ரூபாய். கிண்டர் ஜாய், உள்ளிட்ட சாக்லேட்களை அவர்கள் திருடி சென்றுள்ளனர்.



2. ஐரோப்பா:


ஐரோப்பாவில் 2019-ல் 55,000 அமெரிக்க டாலர் மதிப்பிலான சாக்லேட்களை லாரியில் கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். ஆஸ்திரியாவில் இருந்து பெல்ஜியம் வரை ஒரு நபர் திருடிய சாக்லேட் லாரியோடு சென்றுள்ளார். 




3. ஆஸ்திரியா


Krishna Jayanthi Pooja: கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டு முறை... எப்படி கொண்டாடுவது?


ஆஸ்திரியா நாட்டில் 2012 நடந்த சம்பவம் இது. அங்கிருந்த சாக்லேட் கடையில் நுழைந்த மர்ம நபர், போலியான லைசன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை வைத்து, அங்கிருந்து 18 டன் சாக்லேட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதில் மில்க் சாக்லேட்கள்தான் அதிகம்.


4.பொம்மை துப்பாக்கி- சாக்லேட் கொள்ளை:


தலைநகர் புதுடெல்லியில் மூவர் கூட்டணி பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி மளிகை பொருட்கள், சாக்லேட் மற்றும் பழங்களை சூப்பர் மார்க்கெட்டில் இருந்து கொள்ளையடித்துள்ளனர். ரூ.23,300 மதிப்பிலான பொருட்களை அவர்கள் திருடி சென்றுள்ளனர். பின்னர் கைது செய்யப்பட்டனர்.







 




Also ReadKrishna Jayanthi 2022: கோகுலத்து கண்ணனை வரவேற்கும் கிருஷ்ண ஜெயந்தி! வரலாறு என்ன?


Krishna Jayanthi 2022 Wishes: கிருஷ்ண ஜெயந்தி: வாழ்த்துகள்; புகைப்படங்கள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இங்கே!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண