அமேசானில் ஆர்டர் செய்யப்பட்ட ரூ.1.64 கோடி மதிப்புள்ள பொருட்கள் அடங்கிய லாரியை அப்படியே ஓட்டிச்சென்ற ஓட்டுநர் மற்றும் உதவியாளரை போலிசார் கைது செய்துள்ளனர்


ஆன்லைன் ஷாப்பிங் உலகில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனம் அமேசான். அனைத்து பொருட்களையும் டோர் டெலிவரி செய்யும் இந்நிறுவனம் தற்போது நகரங்களைத் தாண்டி கிராமங்களையும் சென்று சேர்ந்துள்ளது. சிறு பொருள் முதல் பெரிய பொருட்கள் வரை அமேசானில் கிடைக்கும். ஓரிடத்தில் இருந்து மொத்தமாக பொருட்கள் சேகரிக்கப்பட்டு அந்தந்த இடங்களுக்கு பிரித்து அனுப்பப்படுவது அமேசானின் வழக்கம். அப்படி மொத்தமாக பிரித்து லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.1.64 கோடி மதிப்பிலான பொருட்களை வட நாட்டு கும்பல் அலேக்காக கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த கும்பலை  போலீசார் கைது செய்துள்ளனர்.




கர்நாடகாவில் அக்டோபர் 30ம் தேதி ஒரு லாரியில் அமேசான் பொருட்கள் ஏற்றப்பட்டுள்ளன. மொத்தமாக 4027 பொருட்கள் அந்த லாரியில் இருந்துள்ளது. செல்போன்,லேப்டாப் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் அந்த லாரியில் இருந்துள்ளது.


Joker Virus| ஆண்ட்ராய்ட் ஃபோன் யூசரா? ஜோக்கர் வைரஸால் இந்த பிரச்சனைகள்.. இந்த ஆப்ஸ் டெலீட் செய்யணும்


அந்த லாரியை அஸ்ஸாமைச் சேர்ந்த வசி அஜை என்பவரை ஓட்டிச் சென்றுள்ளார். அவருக்கு துணையாக அபிநத் மற்றும் அப்துல் ஹுசைன் சென்றுள்ளனர். லாரி கிளம்பி குறிப்பிட்ட பகுதிக்கு செல்லாமல் வேறு பாதையில் சென்றுள்ளது. தாமதமாகவே இதனைக் கண்ட அமேசான் ஊழியர்கள் லாரியில் பொருத்தப்பட ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் ஜிபிஎஸ் கருவியும் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இதனால் லாரியை கண்காணிக்க முடியாமல் ஊழியர்கள் திணறியுள்ளனர். உடனடியாக கோலார் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.


வயது மூத்தவருடன் லிவிங் டு கெதர்: எஸ்கேப் ஆக நினைத்த ‛மிஸ்டர் இந்தியா’ கைது!


புகாரின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் அஸ்ஸாமைச் சேர்ந்த 3 பேரைக் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் திருடப்பட்ட பொருட்களை வேறு லாரியில் மாற்றி கொள்ளையர்கள் சென்றுள்ளனர். பொருட்களை எல்லாம் சந்தையில் பாதிவிலைக்கு விற்று பணம் சம்பாரிக்க நினைத்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண