சென்னை பாலவாக்கத்தை சேர்ந்தவர் சந்தியாமோகன்(31), இவர் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் கடந்த 2019 ம் ஆண்டு சமூக வலைதளம் மூலமாக காட்டுப்பாக்கத்தில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வரும் மணிகண்டன்(29), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு வந்ததாகவும், இது நாளடைவில் வளர்ந்து  தனது உணவு முறை குறித்து தனிப்பட்ட பயிற்சி மற்றும் ஆலோசனை கேட்க அவரை உடற்பயிற்சி கூடத்தில் அணுகியதாக தவிர்த்திருந்தார். 

 





மேலும் கடந்த ஆண்டு இருவரும் நிகழ்ச்சி ஒன்றிற்காக கோயம்புத்தூர் சென்ற போது தன்னை திருமணம் செய்து கொள்வதாக தன்னுடன் உடலுறவு வைத்து கொண்டதாகவும் சில மாதங்களாக கணவன், மனைவி போல் இருவரும் வாழ்ந்து வந்ததாக பதிவு செய்திருந்தார் .



மேலும் இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களை செல்போனில் பதிவு செய்து வைத்து கொண்டு தன்னை சமீபமாக துன்புறுத்தியதாகவும்,  தன்னை கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவேன் என மிரட்டி வந்ததாகவும் தன்னை பலமுறை தாக்கி காயப்படுத்தியதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூந்தமல்லியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

 


இந்த புகாரின் பேரில் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரித்தபோது, காதலிதை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது உறுதியானதையடுத்து, பெண் வன் கொடுமை சட்டத்தின் கீழ் மணிகண்டனை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட மணிகண்டன் மிஸ்டர் இந்தியா ஆணழகன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.