Today Headlines : 48 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு...! கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்..! - இன்றைய முக்கியச்செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

Continues below advertisement

தமிழ்நாடு: 

Continues below advertisement

  • தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணிநேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி
  • இலங்கைக்கும், தென் தமிழ்நாட்டிற்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வுமையம்
  • கோவையை அனைத்து துறைகளிலும் சிறந்த மாவட்டமாக்க நடவடிக்கை – முதல்வர் மு.க.ஸ்டாலின்
  • கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு ரூபாய் 1032 கோடி ஒதுக்கீடு – முதல்வர் மு.க.ஸ்டாலின்
  • தொடர் மழை காரணமாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • தொடர்மழையால் போடிமெட்டு மலைச்சாலையில் வெள்ளப்பெருக்கு – போக்குவரத்து துண்டிப்பால் பயணிகள் அவதி
  • சிறப்பு எஸ்.எஸ்.ஐ. பூமிநாதனை கொலை செய்த 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
  • எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 சிறுவர்களும் திருச்சி கூர்நோக்கு சிறுவர்கள் முகாமிற்கு அனுப்பிவைப்பு
  • தூத்துக்குடியில் 30 ஆயிரம் கலப்பட டீசல் சிக்கியது
  • பள்ளிகளில், கல்லூரிகளில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் 
  • தமிழ்நாட்டில் 300 இடங்களில் சுற்றுலா துறை சார்பில் மேம்படுத்த திட்டம் – தமிழ்நாடு அரசு அரசாணை
  • திருவண்ணாமலை கோவிலில் மூன்றாவது நாள் தெப்பல் உற்சவம்

இந்தியா : 

  • மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 5 ஆயிரம் சிறப்பு நிவாரணம் – புதுவை முதல்வர் ரங்கசாமி
  • திருப்பதியில் இயல்புநிலை திரும்பியது – ரத்தான டிக்கெட்டுகளில் பக்தர்கள் மீண்டும் தரிசிக்க அனுமதி
  • ஆந்திராவில் தொடர் கனமழையால் 8 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதம் – நெல்லூர், சித்தூர், ராயலசீமா மாவட்டங்கள் கடும் பாதிப்பு
  • குஜராத் கடற்கரையில் சாகர்சக்தி போர் ஒத்திகை – இந்திய ராணுவத்தினர் தீவிர பயிற்சி
  • நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை முன்னிட்டு 28-ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்
  • அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி வேளாண் சட்டங்கள் ரத்து குறித்து விளக்கமளிக்க வாய்ப்பு
  • பஞ்சாபில் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கினார் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால்
  • 5 மாநில சட்டசபைத் தேர்தல் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

உலகம் : 

  • இரண்டு ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருந்த போயிங் 737 மேக்ஸ் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது – விமான போக்குவரத்து நிறுவனங்கள் அறிவிப்பு
  • ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சிகளுக்கு கட்டுப்பாடுகள் – தலிபான்கள்
  • ஆப்கானில் பெண்கள் நடிக்கும் தொடர்கள், மதத்திற்கு எதிரான தொடர்களுக்கு தடை

விளையாட்டு :

  • சையத் அலி முஷ்டாக்  டி20 இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி
  • இரண்டாவது முறையாக சையத் அலி முஷ்டாக் கோப்பையை தமிழ்நாடு கைப்பற்றியது 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola