போலீஸ் வாகனத்தை திருடிச்சென்ற திருடன்


கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் அன்னகேரி பகுதியில் காவல்நிலையம் ஒன்று உள்ளது. அந்த காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்ட்டராக பணிபுரிந்து வரும் எல்.கே. ஜூலகட்டி வழக்கம் போல் கடந்த புதன் கிழமை பணி முடிந்து வீடு திரும்ப காவல்நிலையத்தை விட்டு வெளியே வந்துள்ளார். இரண்டு காவலர்கள் காவல்நிலையத்தினுள்ளே தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர். வெளியே வந்து பார்த்த போது, போலீஸ் ஜீப்பை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றது தெரிய வந்தது. 


தகவல் கொடுத்த உள்ளூர் மக்கள் 


இந்த நிலையில் பியாடாகி மோட்பென்னூர் பகுதியில், போலீஸ் ஜீப் ஒன்று சென்றதாகவும், வாகனத்தினுள் காவலர்கள் யாருமில்லை என்று அப்பகுதி மக்கள் உள்ளூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காரை கடத்தி சென்றவரை  கைது செய்ததோடு ஜீப்பையும் கைப்பற்றினர். விசாரணையில், ஜீப்பை கடத்தி சென்றது அன்னிகேரி டவுனில் வசிக்கும் நாகப்பா ஒய்.ஹடபட் (45) என்பது தெரியவந்தது.




Chennai: முகத்தில் கட்டப்பட்ட பாலிதீன்.. 3 சடலம்.. ரியல் எஸ்டேட் அதிபர் குடும்பத்துடன் தற்கொலை!




 


காரணத்தை கேட்டு அசந்து போன காவல்துறையினர்


விசாரணை செய்ததில், “ அன்னகேரி காவல் நிலையத்தில் போலீஸ் ஜீப்பை பார்க்கும் போதெல்லாம், அதனை ஓட்டிப்பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன். கடந்த புதன் கிழமை போலீஸ் ஜீப் லாக் செய்யப்படாமல் இருந்தது. இதனையடுத்து அதனை திருட முடிவெடுத்த நான், அங்கிருந்து ஜீப்பை திருடினேன்.” என்றார். 


கிட்டத்தட்ட 112 கிமீ வரை ஜீப்பை ஓட்டிச்சென்ற  அவர் ஜீப்பை ஓரிடத்தில் நிறுத்தி தூங்கியுள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினரிடம் பார்த்து சொல்ல இறுதியாக அவரை போலீசார் பிடித்துள்ளனர்.




Kaathu Vaakula Rendu Kaadhal: ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் இரண்டு அப்டேட்! ரிலீஸ் எப்போ தெரியுமா?




 


மேலும் படிக்க: Online crime: ஆன்லைனில் ஆபாச வீடியோ வெளியிட்ட கணவன், மனைவி.. சிக்கியது எப்படி?




 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண