இந்தியாவில் செயல்பட்டு வரும் பிரபல கார் நிறுவனங்களில் ஒன்று ஹூண்டாய். தென்கொரியா நாட்டை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அப்படி பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் நிறுவனத்தின் ட்வீட் ஒன்று தற்போது இந்தியாவில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலுள்ள ஹூண்டாய் நிறுவனம் அதற்கு ஒரு விளக்கத்தையும் அளித்துள்ளது. 


கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 5ஆம் தேதி) பாகிஸ்தானில் இருக்கும்  ஹூண்டாய் நிறுவனம் என்ற பெயரிலுள்ள ட்விட்டர் கணக்கில் ஒரு பதிவு ஒன்று போடப்பட்டிருந்தது. அதில் காஷ்மீர் சுதந்திரத்திற்கு எப்போதும் பிரார்த்திக்கிறோம், காஷ்மீர் சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களை போற்றுவோம் என்பது போல வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. இந்தப் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் பலரும் இந்தப் பதிவை மேற்கோள் காட்டி தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் ஹூண்டாய் நிறுவனத்தை இந்தியர்கள் நிச்சயம் புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்து வந்தனர்.


 






இதைத் தொடர்ந்து ஹூண்டாய் இந்தியா நிறுவனம் சார்பில் விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் ஒரு ட்விட்டர் பதிவை செய்துள்ளது. அதில், “ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருந்து வருகிறோம். மேலும் இந்திய தேசத்தை நாங்கள் மதித்து வருகிறோம். அப்படி இருக்கும் போது தேவையில்லாமல் எங்கள் நிறுவனத்தை பெயரை பயன்படுத்தி போடப்பட்ட ஒரு சமூக வலைதள பதிவிற்கு ஹூண்டாய் இந்தியாவை தொடர்பு படுத்துவது மிகவும் தவறான ஒன்று. 


 


இந்தியா எங்களுக்கு இரண்டாவது தாய்நாடு. ஆகவே எப்போதும்  இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். அதுபோன்ற கருத்துகளை நாங்கள் ஏற்கவும் மாட்டோம். இந்தியா நாட்டு மற்றும் அதன் குடிமக்களின்  முன்னேற்றித்திற்கு தொடர்ந்து உழைத்து கொண்டிருப்போம் ” எனப் பதிவிட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் இந்தப் பதிவு சர்ச்சைக்கு ஒரு பெரிய முற்றுப் புள்ளியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: சரக்கு வேனில் சீக்ரெட் ரூம்.! புஷ்பா பட பாணியில் செம்மரக் கடத்தல்.! சிக்கிய இளைஞர்!