கேரள ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிவசங்கருக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், நானும் சுயசரிதை எழுதினால் பலரது முகமுடிகள் கிழியும் ஸ்வப்னா சுரேஷ் எச்சரித்துள்ளார். இதனால் கேரள தங்கக்கடத்தில் வழக்கில் மீண்டும் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.


கேரளாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு தங்கம் கடத்தியதாக வெளியான செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஐக்கிய அரபு நாடுகள் தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட பல முக்கியப்புள்ளிகளின் பெயர்கள் அனைத்தும் இந்த வழக்கில் அடிபட்டது. குறிப்பாக ஐக்கிய அரபு நாடுகள் வழியா திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த பார்சலை எடுக்க ஸ்ரித் என்பவர் சென்ற போது அவர் சுங்கவரித்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அந்த பார்சலை விடுவிக்கக்கோரி சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாக கேரள தலைமை செயலகத்தில் ஐ.டி பிரிவில் ஒப்பந்த ஊழியராக இருந்த ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார்.





இவரது கைதுக்கு பின்னர் ஸ்வப்னா சுரேசுடன் தொடர்பில் இருந்த சிலரும், தங்கக் கடத்தல் நெட்வொர்க்கில் ஈடுபட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். அதில் முக்கியமான ஒருவர் தான் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக சிங்சங்கரன். இவர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக பணியாற்றிய போதும் தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு 98 நாள்கள் சிறைவாசம் அனுபவித்தார். பின்னர் ஜாமினில் வெளிவந்த இவர் மீண்டும் அரசுப்பணியாற்றிவருகிறார்.


தற்போது தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த காலங்கள் மற்றும் வழக்குத் தொடர்பாக “ அஸ்வத்தாமாவு வெறும் ஒரு ஆன“ என்ற புத்தகத்தில் தனது சுயசரிதையை எழுதியுள்ளார். அதில் விசாரணை ஏஜென்சிகளையும், பிரச்சனையை பூதாகரமாக்கிய மீடியாக்களையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதோடு மட்டுமில்லாமல், தங்கக்கடத்தலில் ஈடுபட்ட நபரை விடுவிக்கக்கோரி ஸ்வப்னா சுரேஷ் தன்னிடம் கூறியதாகவும், இதற்காக கடந்த ஆண்டு ஜூலை முதல் வாரத்தில் தனது கணவருடன் வீட்டுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் விமானத்தில் வந் பார்சல் ஸ்டீரியோக்கள் தான் இருக்கின்றனர் எனவும் ஸ்வப்னா தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஸ்வப்னா தனக்கு அன்பளிப்பாக தந்த ஐபோன் தான் இந்த வழக்கை திசை திருப்பியதாகவும் தனது சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து தான் சிவசங்கரனின் சுயசரிதையில் எழுதியுள்ள தகவல்களுக்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக சமீபத்தில் ஸ்வப்னா சுரேஷ் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் நானும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சிவசங்கரும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், மாதத்திற்கு 2 முறையாவது சென்னை , பெங்களுக்கு இருவரும் சேர்ந்து சொல்வோம் என தெரிவித்துள்ளார். இதோடு சில சமயங்களில் வெளிநாடுகளுக்கு கூட சென்றுள்ளதாகவும் பேட்டில் குறிப்பிட்டுள்ளார். அப்படி இருக்கும் போது நான் ஏன் ஐபோனைக் கொடுத்து கரெட் செய்திருக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.





மேலும் தங்கக்கடத்தல் வழக்கில் கைதாகி சுங்கத்துறை அதிகாரிகள் காவலில் இருந்தப்போது, இதற்கும் முதல்வருக்கும் தொடர்பு இல்லை என்று நான் கூறுவது போன்ற வெளிவந்த வீடியோ கூட திட்டமிட்டு உருவாக்கப்பட்டது எனவும், இதனை சிவசங்கரன் தான் ஏற்பாடுகளை செய்தார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். எனவே எங்களுக்கும் சுயசரிதை எழுதத்தெரியும் எனவும், அவ்வாறு எழுதினால்  பலரது முகமுடிகள் கிழியும் எனவும் பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.