கர்நாடகா மாநிலத்தில் மாற்றுத் தலைமைக்கான செயல்பாடுகள் தொடங்கியதை அம்மாநில முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, "வரும் ஜூலை 25ம் தேதியுடன், கர்நாடகாவில் பாஜக ஆட்சயமைத்து இரண்டு வருடங்கள் நிறைவடைகிறது. அதன்பின், தேசியத் தலைவர் ஜே.பி நட்டா இடும் உயர் கட்டளையை பின்பற்றுவேன்" என்றார்.
மேலும், பாஜக தேசியத் தலைவர் நட்டா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் என் மரியாதையையும், நம்பிக்கையையும் கொண்டுள்ளனர். இந்த அன்பு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பாஜகவில் 75 வயது நிறைவடைந்த ஒருவருக்கு, பதவிகள் தரப்படுவதில்லை. ஆனால், என்னை 78-79 வயது வரை அவர்கள் பணி செய்ய அனுமதித்துள்ளார்கள். பாஜகவை ஆட்சிக் கட்டிலில் மீண்டும் ஏற்ற வேண்டும். மாநிலத்தில் கட்சியை பலப்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது. நடா ஜி என்ன சொன்னாலும் அதைப் பின்பற்றுவதாக இடுகையிடவும்.
பாஜகவின் மீது உயரிய விசுவாசம் கொண்டவன் என்பதில் பெருமை கொள்கிறேன். உயர்ந்த நடத்தைமுறைகளை பின்பற்றி கட்சிக்கு சேவை செய்திருக்கிறேன். கட்சி நெறிமுறைகள் அனைவரும் பின்பற்ற வேண்டும். கட்சிக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் போராட்டங்கள் / ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
எனக்காக நடத்தப்பட்ட போராட்டங்களை நான் ஏற்கவில்லை. அனைத்து குருமார்களின் ஆசிர்வாதங்களும் எனக்கு உண்டு, அதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்" என்று தெரிவித்தார்.
தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, புதுச்சேரியில் பாஜக பெரிய வளர்ச்சி அடையாத சூழலில் கர்நாடகாவில் பாஜகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியவர் எடியூரப்பா. கடந்த 2008-ஆம் ஆண்டில் முதன்முறையாக கர்நாடகாவின் முதலமைச்சராக பொறுப்பேற்ற எடியூரப்பா, 2011 ஆம் ஆண்டில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டால் அப்பொறுப்பில் இருந்து பதவி விலகினார்.
தற்போது அவரது தலைமையில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் எடியூரப்பாவின் மகன்கள் ஆட்சி நிர்வாகத்தில் பெரிதும் தலையிடுவதாக டெல்லி பாஜக தலைமைக்கு குற்றச்சாட்டுகள் பறந்தன. மேலும் எடியூரப்பாவின் வயது மற்றும் உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கர்நாடக மாநிலத்திற்கு புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது
இச்சூழலில் டெல்லி சென்ற எடியூரப்பா பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்தித்தார். பாரதிய ஜனதா கட்சி கொள்கைப்படி மூத்த தலைவர்கள் அரசுப்பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வேறு பொறுப்புகளுக்கு செல்கிறார்கள். அதன்படி 79 வயதாகும் எடியூரப்பாவும் விரைவில் கர்நாடக முதல்வர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவார் என கூறப்படுகிறது.
மேலும், வாசிக்க:
mekedatu Dam: ஏன் கூடாது மேகதாது... கர்நாடக முனைப்பும்... தமிழ்நாடு எதிர்ப்பும்!