மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரில் அமைந்துள்ளது பாலேஷ்வர் மகாதேவ் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று ராமநவமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், ராமநவமி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் இந்த கோயிலில் நடைபெற்றது. இதையடுத்து, ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்திருந்தனர்.


35 ஆக அதிகரித்த உயிரிழப்பு:


இந்த நிலையில், கோயிலில் இருந்த கிணறு ஒன்று முழுவதும் ஸ்லாப் எனப்படும் சிமெண்ட் கற்களால் கூரையாக மூடப்பட்டு இருந்தது. அந்த ஸ்லாப் கற்கள் மீது ஏராளமான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பாரம் தாங்காமல் அந்த சிலாப்கற்கள் உடைந்து விழுந்ததில் கிணற்றுக்குள் ஏராளமான பக்தர்கள் விழுந்தனர்.


திடீரென நிகழ்ந்த இந்த அசம்பாவிதத்தில் நேற்றே 18 பேர் உயிரிழந்த நிலையில், இன்று காலை உயிரிழப்பு எண்ணிக்கை 35 ஆக உயிரிழந்துள்ளது.  18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்னும் ஒருவர் மட்டும் காணவில்லை என்று கூறப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  


இழப்பீடு:


மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் இந்த விபத்து சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடும், கயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.


இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்து சம்பவம் தொடர்பாக மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகானிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஆம்புலன்ஸ் தாமதம்:


விபத்து நடைபெற்ற கோயில் அமைந்துள்ள படேல்நகரின் குடியிருப்பு சங்கத் தலைவர் காந்திபாய் படேல் கூறும்போது, விபத்து நடைபெற்று 1 மணி நேரமாகியும் முறையாக தகவல் தெரிவித்தும் சம்பவ இடத்திற்கு எந்த ஆம்புலன்சும் வரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். தற்போது விபத்து நடந்துள்ள பாலேஷ்வர் ஆலயம் அந்த பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமைவாய்ந்த கோயில் ஆகும்.


விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், ஒருவரது நிலை பற்றி எந்த தகவலும் இதுவரை ஏதும் தெரியாததால் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கோயில் பகுதிகளில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி வருவதால் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க: Ram Navami clash: ராம நவமி கொண்டாட்டத்தில் பயங்கர கலவரம்..! வாகனங்களுக்கு தீ வைப்பு..! பதற்றத்தில் மே.வங்கம்..!


மேலும் படிக்க: PM Modi TN Visit: பிரதமர் மோடி 9-ந் தேதி முதுமலைக்கு பயணம்...! ஆஸ்கர் பிரபலங்கள் பொம்மன், பெள்ளியுடன் நேரில் சந்திப்பு..!