கடந்த ஆண்டுக்கு பிறகு மகாராஷ்டிரா மாநிலத்தில், ஒரே நாளில் 694 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


அதிகரிக்கும் கொரோனா:


திடீரென தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,016ஆக உயர்ந்துள்ளது. ஆனால் தொற்றுக்கு இன்று யாரும் உயிரிழக்கவில்லை என மகாராஷ்டிரா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


இந்நிலையில் கொரோனா தொற்று தொடர்பாக மகாராஷ்டிரா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது, மகாராஷ்டிராவில் வியாழக்கிழமை இன்று புதிதாக 694 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நோய்த்தொற்றுகளில் 63 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொடர்பான இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.






தொற்று பாதிப்பு:


மாநிலத்தின் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தற்போது 3,016 ஆக உள்ளது. கடைசியாக அக்டோபர் 27-ம் தேதி 972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அதிகமாக எண்ணிக்கையாகும். கடந்த 24 மணி நேரத்தில் 184 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 98.14 சதவீதமாக உள்ளது.


நேற்று, புதன்கிழமை 483 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மும்பை, புனே, தானே, ராய்காட், நாசிக் மற்றும் சாங்லி போன்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் பதிவாகியுள்ளன.


ஒரே நாளில் 3 ஆயிரம் பேர்:


இந்தியாவில் இன்று ஒரே நாளில் 3,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆறு மாதங்களில் மிக உயர்ந்த அளவாகும். அதே நேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 13,509 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.


Also Read: 100 Day Work: 100 நாள் வேலை திட்டத்தில் சம்பள உயர்வு..! எவ்வளவு தெரியுமா? தமிழ்நாடு அரசு அதிரடி


Also Read: கடந்த சீசனில் சென்னை அணிக்காக அறிமுகமாகி 16 விக்கெட்களை எடுத்துகொடுத்த முகேஷ் சவுத்ரி முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.