புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு 45 கைத்துப்பாக்கிகளுடன் வந்திறங்கிய இந்தியத் தம்பதியினரை சுங்கத்துறை அலுவலர்கள் இன்று (ஜூலை.13) கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட இத்தம்பதியினர் ஜக்ஜித் சிங் - ஜஸ்விந்தர் கவுர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


வியட்நாமிலிருந்து திரும்பிய தம்பதி


இத்துப்பாக்கிகள் உண்மையானவையா போலியானவையா என சந்தேகம் ஏற்பட்ட நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) தீவிரவாத தடுப்புப் பிரிவு, துப்பாக்கிகள் முற்றிலும் உண்மையானவை என முன்னதாக அறிக்கை அளித்துள்ளது.


ஜக்ஜித் சிங் - ஜஸ்விந்தர் கவுர் தம்பதியினர் கடந்த ஜூலை 10ஆம் தேதி வியட்நாமில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பிய நிலையில், முன்னதாக ஜக்ஜித் சிங்கின் சகோதரர் மஞ்சித் சிங் கொடுத்த இரண்டு டிராலி பைகள் முழுவதும் இருந்த கைத்துப்பாக்கிகளுடன் இருவரும் பிடிபட்டுள்ளனர்.


22 லட்சம் மதிப்பு!


 






இத்துப்பாக்கிகளின் மொத்த விலை சுமார் ₹ 22,50,000 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து வியட்நாமில் தரையிறங்கிய பின்னர் மஞ்சித் சிங் இப்பைகளை தன்னிடம் கொடுத்ததாக ஜக்ஜித் சிங் விசாரணையில் தெரிவித்துள்ளார்.


மேலும் கைது செய்யப்பட்டுள்ள இத்தம்பதி முன்னதாக  ஏற்கெனவே இதேபோல் துருக்கி நாட்டில் இருந்து இந்தியாவுக்கு 25 கைத்துப்பாக்கிகளை எடுத்து வந்துள்ளதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.


இந்நிலையில் சுங்கத் துறை அலுவலர்கள் இச்சம்பவம் குறித்து முழுவீச்சில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்




மேலும் படிக்க: Rhea Chakraborty Drugs Case : தம்பியிடமிருந்து கஞ்சா.. சுஷாந்துக்கு போதைப்பொருள்.. ரியா சக்ரவர்த்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த என்சிபி!


Watch video: நெல்லை அருகே பள்ளிவாசலில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கடத்தல் - சிசிடிவி காட்சியால் பரபரப்பு


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.