இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தை தொலைநோக்கி மூலம் தனியார் வானியலாளர்களால் விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 1,27,603 கிமீ x 236 கிமீ சுற்றுப்பாதையை எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான்-3 சமீபத்தில் பூமியில் சுற்றுவட்டப்பாதையை உயர்த்தும் அதன் இறுதி நகர்வை முடித்தது, இப்போது அதன் சந்திர பயணத்தைத் தொடங்க உள்ளது. அதாவது சந்திரனை நோக்கிய பயணத்தில், சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழையும். போலந்து ROTUZ (Panoptes-4) தொலைநோக்கியைப் பயன்படுத்தி தனியார் வானியலாளர்கள் குழு விண்வெளியில் பயணித்த சந்திரயான் 3 விண்கலத்தைக் கண்டனர். தொலைநோக்கியை இயக்கும் நிறுவனமான சிபில்லா டெக்னாலஜிஸ், பரந்த விண்வெளியில் சந்திரயான் -3 ஒரு சிறிய புள்ளியாக தென்பட்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளது.
அதிநவீன சந்திரயான் 3:
சந்திரயான் 3 விண்கலத்தில் laser doppler velocity metre எனப்படும் புதிய சென்சார் கருவி இதில் இணைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து வெளிப்படும் லேசர் ஒலி மூலம், மூன்று வேக திசையான்களின் (Three velocity Vectors) தகவல்களை பெற முடியும். மேலும், இன்ஜின் பிரச்னை, உந்துதல் இடையூறு, சென்சார் செயலிழப்புகள் உள்ளிட்ட பிரச்னைகளை தவிர்க்கும் விதமாக மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய லேண்டர் கருவியின் எடை 200 கிலோ அளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, அதன் லேண்டிங்கின் போது குறைந்தது 2 இன்ஜின்கள் செயல்படுவது அவசியம். அதன் காரணமாகவே எடையை குறைக்கும் நோக்கில், சந்திரயான் - 2 விண்கலத்தில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட மத்திய இன்ஜின் அகற்றப்பட்டது. மேலும் பல்வேறு கட்டமாக சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜூலை 14 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய திட்ட இயக்குனர் வீர முத்துவேல், இனி வரும் சூழல்கள் மிகவும் சவாலானதாக இருக்கும். அதாவது நிலவின் புவிவட்ட பாதையை அடைவது, soft landing, லேண்டரில் இருந்து ரோவர் பிரிவது உள்ளிட்ட பல சவாலான நிகழ்வுகள் நடக்க உள்ளதாக குறிப்பிட்டார்.
சந்திரயான் 3 விண்கலத்தின் செயல்பாடுகள் அனைத்தும் சீராக எதிர்ப்பார்த்தப்படி இருந்தால் ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை 5.47 மணிக்கு சுமார் 3.8 லட்சம் கிலோமீட்டர் பயணத்திற்கு பின் நிலவில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..