தமிழ்நாடு:



  • மீண்டும் விசாரணைக்கு வரும் கோடநாடு வழக்கு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக தகவல்

  • இரண்டு நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணத்தை தொடங்கி வைக்கிறார்

  • ராமநாதபுரத்தில் அமைச்சர் அமித்ஷா கலந்துக்கொள்ளும் பொதுக்கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்கிறார். 

  • கடலூர் மாவட்டம் கரிவெட்டி கிராமத்தில் மின்வெட்டை கண்டித்து கையில் தீபந்தம் ஏந்தி போராட்டம். என்.எல்.சி வாய்க்கால் பணிகளுக்காக வந்த கிரேன் இயந்திரம் மின் கம்பியை சேதப்படுத்தியதாக புகார். 

  • விளை நிலங்கள் வழியே என்.எல்.சி நிறுவனம் கால்வாய் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு- சுரங்க விரிவாக்க பணிகள் அல்ல என என்.எல்.சி நிறுவனம் விளக்கம்.

  • மக்கள் ஆட்சி நடக்கிறதா அல்லது சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா என என்.எல்.சி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கண்டனம் - மக்கள் உணர்வுகளை மதிக்காமல் நிலம் கையகப்படுத்துவதாக அன்புமணி ராம்தாஸ் புகார்.

  • தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம். - tnea.online.org என்ற இணையத்தளம் மூலம் பங்கேற்கலாம்.

  • பெரம்பலூரில் அரசு மதுபான கூடத்தில் மது  அருந்தியவர் உயிரிழப்பு - இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் மறியல்

  • மதுரை அருகே பச்சிளம் குழந்தையை கொலை செய்த தாய். மன அழுத்ததாள் கொடூர செயலில் ஈடுபட்டதாக தகவல்.


இந்தியா: 



  • ஆகஸ்ட் 25, 26 ஆம் தேதிகளில் எதிர்க்கட்சிகளின் மூன்றாவது கூட்டம் நடைபெறுகிறது  -  அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்கிறது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்

  • மணிப்பூரில் ஆடையின்றி இரண்டு பெண்களை இழுத்துச்சென்ற சம்பவம் - வீடியோ வெளியானதை குறித்து சிபிஐ விசாரிக்க மத்திய அரசு உத்தரவு. 

  • மணிப்பூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மோரே நகரத்தில் 25 க்கும் அதிகமான வீடுகளுக்கு தீவைப்பு- தமிழர்கள் உடைமைகளுக்கு சேதமில்லை என தமிழ்ச் சங்கம் தகவல்

  • களநிலவரத்தை ஆய்வு செய்ய மணிப்பூர் செல்கிறது எதிர்க்கட்சிகள் கூட்டம்-  29, 30 தேதிகளில் நேரில் ஆய்வு

  • மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர் முழக்கம்- அமளிக்கு மத்தியில் மசோதாக்கள் நிறைவேற்றம்

  • பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரத்தில் விளக்கமளிக்காததை கண்டித்து கருப்புடை அணிந்து வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் - ராஜஸ்தான் செல்ல முடிந்த பிரதமரால் நாடாளுமன்றத்திற்கு வர இயலவில்லை என மல்லிகார்ஜுன் கார்கே சாடல்

  • அதிகமான தரவுகளை பெறவே ஒருவரை விசாரணை முகமைகள் கைது செய்கின்றனர்-அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதிகள் கருத்து. 


உலகம்:



  • நைஜர் நாட்டில் அதிபரை சிறைப்பிடித்து ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்- ஐநா, ஆப்பிரிக்கா ஒன்றியம் கடும் கண்டனம். 

  • பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி- 2.4 பில்லியன் டாலரை கடனாக வழங்கிய சீனா

  • துருக்கியில் அதிகரித்து வரும் சட்ட விரோத குடியேற்றம்- இதுவரை 35 ஆயிரம் பேர் கைது. 


விளையாட்டு: 



  • மேற்கு இந்திய தீவுகள் அண்க்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி -  இந்தியா வெற்றி

  • இங்கிலாந்து - ஆஸ்திரேலியா ஆஷஸ் டெஸ்ட்: 2 வது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது

  • டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்படியலில் பாகிஸ்தான் முதலிடம் - இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 

  • ஃபிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வியட்நாமை தோற்கடித்து முதல் வெற்றியை பெற்றது.