நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. 1947ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திர தினம் கிடைத்தது. இன்று உடன் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதை கொண்டாடும் வகையில் கடந்த ஆண்டு முதல் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது. அசாதி கா அமிர்த் மஹோத்சவ் என்ற பெயரில் பல்வேறு கொண்டாட்டங்களை நடத்தி வந்தது. 




மேலும் படிக்க: வந்தே மாதரம்... தாயின் மணிக்கொடி...தேசப்பற்றுக்கான டாப்-10 தமிழ் பாடல்கள்..!




இந்நிலையில் இன்று காலை பிரதமர் மோடி டெல்லியில் செங்கோட்டையில் கொடி ஏற்றுகிறார். இன்று கொடியேற்றிய பிறகு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அந்த உரையில் சுகாதாரம் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை அவர் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஹீல் இந்தியா மற்றும் ஹீல் பை இந்தியா என்ற பெயரில் சில முக்கிய அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 






அத்துடன் 2047ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் ரத்த சோகை நோயை ஒழிப்பது தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 


சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவை கொண்டாடும் வகையில் நகரங்கள், கிராமங்கள் என அனைத்து பகுதிகளிலும் தேசிய கொடியின் விற்பனை சக்கைபோடு போட்டு வருகிறது. தேசபற்றை பரப்புவதே இதன் நோக்கம் ஆகும். ஆனால் கொடியை ஏற்றுவதற்கும் காட்சிப்படுத்துவதற்கும் பல விதிகள் உள்ளன என்பது பலருக்குத் தெரியாது. இந்த விதிகள், இந்திய கொடி விதிகள், 2002 மற்றும் தேசிய நினைவு சின்ன அவமதிப்பு தடுக்கும் சட்டம், 1971இல் இடம்பெற்றுள்ளன.


தேசிய கொடியை யார் எல்லாம் ஏற்றலாம்? எந்த நாள்களில் ஏற்றலாம்?









தேசிய கொடியை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?


கொடியானது ஒருவர் விரும்பும் அளவுக்கு பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கலாம். ஆனால், தேசியக் கொடியின் நீளத்திற்கும் (அகலத்திற்கும்) உயரத்திற்கும் இடையிலான விகிதம் 3:2 ஆக இருக்க வேண்டும்.


எனவே, கொடியானது சதுரம் அல்லது வேறு எந்த வடிவத்திலும் இல்லாமல் செவ்வகமாக இருக்க வேண்டும். டிசம்பர் 30, 2021 அன்று மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்குப் பிறகு, கொடியானது கையால் துருவிய மற்றும் கையால் நெய்த அல்லது இயந்திரத்தால் செய்யப்பட்ட, பருத்தி, பாலியஸ்டர், கம்பளி, பட்டு அல்லது காதியால் செய்யலாம். கொடியை திறந்த வெளியிலோ அல்லது பொதுமக்களின் வீட்டிலோ வைத்தால் இரவும் பகலும் கூட பறக்க விடலாம்.




மேலும் படிக்க:75-வது சுதந்திர தினம்: வாழ்த்துகள், புகைப்படங்கள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இங்கே..!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண