கையால் மலம் அள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ள போதிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த தொழிலில் ஈடுபடுபடுபவர்கள், முறையான கருவிகளுடன் சாக்கடையில் இறங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டாலும், விதிகள் அனைத்தும் ஏட்டளவில் மட்டுமே உள்ளன.


தற்போது, நாடு தழுவிய அளவில் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை அபாயகரமான முறையில் சுத்தம் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரையும் கணக்கெடுக்கத் தயாராகி வருகிறது சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் (MoSJ&E). கடந்த 2017ஆம் ஆண்டு முதல், இந்த தொழிலில் ஈடுபட்டவர்களில் குறைந்தபட்சம் 351 பேர் உயிரிழந்துள்ளனர். 


கையால் மலம் அள்ளும் தொழிலும் இந்த பணியும் வேறு என விளக்கம் அளித்துள்ள அமைச்சகம், கையால் மலம் அள்ளும் அனைவரும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு மறுவாழ்வு திட்டத்தில் அவர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கையால் மலம் அள்ளும் தொழில் நாட்டில் நடைமுறையில் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.


500 AMRUT (புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன்) நகரங்களில் விரைவில் நடத்தப்பட உள்ள இந்த கணக்கெடுப்புப் பயிற்சியானது, மத்திய அரசின் இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு சுற்றுச்சூழல் அமைப்பிற்கான (நமஸ்தே) தேசிய செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது மறுவாழ்வு செயல்முறையை சீராக்கும் என்று அமைச்சக அலுவலர்கள் தெரிவித்தனர். 


இறுதியில் 2007 இல் தொடங்கப்பட்ட கையால் துப்புரவாளர்களின் மறுவாழ்வுக்கான சுய-வேலைவாய்ப்புத் திட்டத்துடன் (SRMS)  துப்புரவு சுற்றுச்சூழல் அமைப்பிற்கான (நமஸ்தே) தேசிய செயல் திட்டம் ஒன்றிணைந்து செயல்படுத்தப்பட்டது.


துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் செயல்முறையை இத்திட்டம் ஒழுங்குபடுத்தும். இறுதியில், 2007 இல் தொடங்கப்பட்ட கையால் மலம் அள்ளும் துப்புரவு தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டத்துடன் (SRMS) இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது.


துப்புரவு சுற்றுச்சூழல் அமைப்பிற்கான (நமஸ்தே) தேசிய செயல் திட்டம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆகியவற்றால் கூட்டாக மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டம் பாதுகாப்பற்ற கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் நடைமுறைகளை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என இத்திட்டத்தை மேற்பார்வையிடும் சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் மூத்த பொருளாதார ஆலோசகர் யோகிதா ஸ்வரூப் கூறியுள்ளார்.


இந்த திட்டத்திற்காக அமைசக்கத்தின் நிலையான நிதிக்குழு, ஏற்கனவே ₹360 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகையானது, அடுத்த நான்கு ஆண்டுகளில் செலவிடப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண