SU-30MKI விமானத்தில் இருந்து கப்பல் இலக்கை நோக்கி வான்வழி ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையின் அதிக ரேஞ்ச் சாதனையை இந்திய விமானப்படை (IAF) நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது.
சுமார் 400 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் இந்த ஏவுகணை, வங்காள விரிகுடா பகுதியில் சோதனையில் ஈடுபட்டது. பாதுகாப்பு அமைச்சகம் பதிவிட்டுள்ள டிவீட்டில், “இந்திய விமானப்படை பிரம்மோஸ் ஏவுகணையின் extended range, SU-30MKI விமானத்தில் இருந்து கப்பல் இலக்குக்கு எதிராக வெற்றிகரமாக செலுத்தப்பட்டது” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம், SU-30MKI விமானங்களிலிருந்து நிலம் அல்லது கடல் இலக்குகளுக்கு எதிராக மிக நீண்ட தூரங்களில் துல்லியமான தாக்குதல்களை நடத்துவதற்கு IAF "குறிப்பிடத்தக்க திறன் ஊக்கத்தை" அடைந்துள்ளது என்று கூறப்பட்டிருந்தது. "SU-30MKI விமானத்தின் உயர் செயல்திறனுடன் இணைந்த ஏவுகணையின் நீட்டிக்கப்பட்ட வீச்சு திறன் (extended range) IAF க்கு ஒரு மூலோபாய அணுகலை அளிக்கிறது மற்றும் எதிர்கால போர்க்களங்களில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கிறது.
IAF, இந்திய கடற்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), BAPL மற்றும் HAL ஆகியவற்றின் அர்ப்பணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள் இந்த சாதனையை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.