Encounter in J&K: ஜம்மு காஷ்மீரில்  உள்ள சித்ரா பகுதியில் இன்று (28/12/2022) காலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. இதில், பாதுகாப்பு படையினருக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என தவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பயங்கரவாதிகள் அதே இடத்தில் இருந்து தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வந்தனர். இதனால் எதிர் தாக்குதல் பாதுகாப்பு படை தரப்பில் நடத்தப்பட்டது. இதனால் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தரப்பில் இருந்து துப்பாக்கிச்சூடு நீண்ட நேரம்  நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டினால் உத்தம்பூரில் நடக்கவிருந்த பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 










இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மூன்று கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


காஷ்மீரில் சுற்றுலா:


ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா என்பது ஜம்மு-காஷ்மீர் காஷ்மீர் பள்ளத்தாக்கு, செனாப் பள்ளத்தாக்கு, சிந்து பள்ளத்தாக்கு மற்றும் லித்தர் பள்ளத்தாக்கு போன்ற பல பள்ளத்தாக்குகளை கொண்டுள்ளது. ஸ்ரீநகர், முகலாயத் தோட்டங்கள், குல்மார்க், பகல்காம், பத்னிதோப் மற்றும் ஜம்மு போன்றவை ஜம்மு-காஷ்மீரில் சில முக்கிய சுற்றுலா தலங்கள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான இந்து யாத்ரீகர்கள் வைஷ்ணவி தேவி கோயிலுக்கும் அமர்நாத்தின் பனிக்கட்டி இலிங்கத்தைத் தரிசிக்கவும் வருகை தருகின்றனர். இது மாநிலத்தின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 
காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்தியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் மிகவும் பிரபலமான மலை வாழிடங்களில் ஒன்றான குல்மார்க், உலகின் மிக உயர்ந்த பசுமையான குழிப்பந்தாட்ட மைதானமாகவும் உள்ளது. தீவிரவாத அச்சத்தால் கடந்த முப்பது ஆண்டுகளில் சுற்றுலா மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.


சுற்றுலாவை நம்பியிருக்கும் வணிகம் தொடர்புடைய மக்கள் கடும் சவால்களை எதிர்கொள்கின்றனர். மேலும் பிராந்தியத்தில் முன்னெப்போதுமில்லாத சூழ்நிலை காரணமாக எப்போதும் பெரும் இழப்பை சந்திக்கின்றனர். ஜம்மு-காஷ்மீர் அதன் அழகிய அழகு, மலர் தோட்டங்கள், ஆப்பிள் பண்ணைகள் மற்றும் பலவற்றிற்கும் பிரபலமானது. இது அதன் தனித்துவமான கைவினைப்பொருட்கள் மற்றும் உலகப் புகழ்பெற்ற காஷ்மீரி சால்வைகளுக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


ஜம்மு-காஷ்மீரை சாலை வழியாகவும், விமானம் மூலம் அடையலாம். தேசிய நெடுஞ்சாலை எண் 1ஏவில் காசிகுண்டிற்கு அருகிலுள்ள பனிஹால் சாலை சுரங்கப்பாதை வழியாகவும், சிந்தான் கணவாய் மற்றும் கிஷ்துவார் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 1பி வழியாகவும் இது இந்தியாவின் பிற பகுதிகளுக்கு அணுகலைக் கொண்டுள்ளது.