இமாச்சல பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள  சுக்விந்தர் சிங் சுக்குவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்தியாவில் கொரோனா நிலவரம்


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4.46 கோடியாக அதிகரித்துள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியை 41 லட்சத்து 41 ஆயிரத்து 854 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,559 பேர் சிசிக்சை பெற்று வருகின்றனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 30  ஆயிரத்து 674ஆக உள்ளது. இதுவரை 220 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


சுக்விந்தர் சிங் சுகுவுக்கு கொரோனா


இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில், 40 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி அங்கு ஆட்சியை கைப்பற்றியது. கடந்தமுறை சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவராக இருந்த சுக்விந்தர் சிங் சுக்குவை இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக்க காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்துள்ளது. 


சுக்விந்தர் சிங்சுக்கு இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக கடந்த 11ஆம் தேதி பொறுப்பேற்றார். அதோடு, முகேஷ் அக்னிஹோத்ரி துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். முதல்வர் பதவியை அடைவதற்கு கடும் போட்டி நிலவி வந்த நிலையில் காங்கிரஸ் மேலிட தலைவர்களின் தலையீடு காரணமாக இந்த பிரச்சனை சுமூக முடிவுக்கு வந்தது.






இந்நிலையில் சுக்விந்தர் சிங்சுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர் கெரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அவர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பிரதமரை சந்திக்குமான திட்டம் தள்ளிவைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அவர் கலந்த கொள்ள இருந்த அரசு நிகழ்ச்சியும் ஒத்திவைக்கப்பட்டது. அனைத்து நிகழ்ச்சிகளையும் தள்ளிவைத்த அவர், தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.




மேலும் படிக்க


கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் பறவைக் காய்ச்சல்… கோட்டயம் மாவட்டத்தில் பறவைகளை அழிக்க உத்தரவு!


Swiggy Search: உள்ளாடை..பெட்ரோல்..! ஸ்விகியில்ல இதெல்லாமா தேடுவீங்க...? நீங்களே பாருங்க...