ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டிணத்தில் உள்ள அரசு உருது சிறுபான்மையினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தலைமை ஆசிரியர், பெண் கணினி ஆபரேட்டருடன் உல்லாசமாக இருந்ததை மாணவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து வைரலாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டணம் சிலகலப்புடி ரயில் நிலையம் அருகே அரசு உருது சிறுபான்மையினர் உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இதில் மசூலிப்பட்டணம் பகுதி மாணவர்கள் ஏராளமானோர் தங்கி படித்து வருகின்றனர். இந்த பள்ளி விடுதி அறையில் இரவு நேரங்களில் தலைமை ஆசிரியர் ஆனந்த பாபு, பெண் கணினி ஆபரேட்டருடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதனை கவனித்த மாணவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து மற்ற மாணவர்களுக்கு பகிர்ந்துள்ளனர்.
தலைமை ஆசிரியர் கைது
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோ எடுக்கப்பட்டதை அறிந்த தலைமை ஆசிரியர் மாணவர்களை கடுமையாக தாக்கி உள்ளார். தினமும் அவர் வகுப்பறைக்கு வரும் மாணவர்களை சராமரியாக தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. சில மாணவர்கள் அடிக்கு பயந்து உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தலைமை ஆசிரியரின் வீடியோ சமூக வளைதளத்தில் வெளியானதால் சிலகலப்புடி போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆனந்த்பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப் பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஆந்திரா மாநிலத்தில் 2ஆம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திரா கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை பள்ளியில் உளள ஒரு அறையில் படிக்க கற்றுத் தருவதாக கூறி அழைத்தார். பின்பு அந்த சிறுமியை தலைமை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியின் உடலில் ரத்தக்கசிவு மற்றும் காயங்கள் இருப்பதை பெற்றோர்கள் கண்டனர். பின்பு இதுகுறித்து சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரித்தபோது நடந்தவற்றை தெரிவித்தார். மேலும் 4 தையல்கள் போட்ட பிறகே சிறுமிக்கு ரத்தக் கசிவு நின்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரை அடுத்து தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க
சரக்குகளுக்கு 'பில்' கொடுக்காதவர்கள் 'வாட்ச்'க்கு பில் கேட்பதா? - பாஜக நாராயணன் கேள்வி
Watch Video: "காணக் கண்கோடி வேண்டும்.." - உலகக்கோப்பையை குழந்தையை போல கையில் ஏந்திய மெஸ்ஸி..!