பெருந்தொற்றுக்கு முன்பு வரை, பிக் பாஸ்கெட் மற்றும் க்ரோஃபர்ஸ் ஆகிய ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள்தான் சூப்பர் மார்க்கெட்டுக்கு மாற்றாக இருந்தன. அதற்கு பிறகு, இணைய வர்த்தகத்தை பொருத்தவரை, இந்தியா பெரிய அளவு முன்னேற்றம் கண்டுள்ளது.
ஸ்விகி இன்ஸ்டாமார்ட்:
சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் 24 மணி நேரமும் உணவுகளை டெலிவரி செய்யும் நிறுவனமாக ஸ்விகி உள்ளது. ஆரம்பத்தில் சில பயனாளர்களை கொண்ட இந்நிறுவனம், இன்று பல லட்சம் பயணாளிகளுக்கு உணவு பொருள்களை விநியோகம் செய்து வருகிறது. பொருள்கள் வாங்குவது மிகவும் எளிதாக்கப்பட்ட நிலையில், இன்னும் பல்வேறு விதமான பொருள்களை ஆன்லைனில் டெலிவரி செய்ய வேண்டும் என வாடிக்கையாளர்கள் விரும்புவது தெரிய வந்துள்ளது.
ஸ்விகியின் இன்னொரு செயலியான ஸ்விகி இன்ஸ்டா மார்ட், மளிகைப் பொருட்களையும் வாடிக்கையாளரின் வீட்டிற்கே சென்று டெலிவரி செய்து வருகிறது. இரால் நகம் போன்ற பொருள்களை எல்லாம் அமேசான் டெலிவரி செய்து வரும் நிலையில், 8,000 க்கும் அதிகமானோர் ஸ்விகியில் உள்ளாடைகள் விற்கப்படுமா என தேடியுள்ளனர்.
பெட்ரோலைத் தேடிய வாடிக்கையாளர்கள்:
இந்தியாவில் இணையத்தில் எரிபொருள்கள் விற்கப்படுவது சட்ட விரோதமாக உள்ள நிலையில், ஸ்விகி இன்ஸ்டா மார்ட்டில் 6,000க்கும் மேற்பட்டோர் பெட்ரோல் விற்கபடுமா என தேடியுள்ளனர். சிலர் உள்ளாடை விற்கப்படுமா என தேடியுள்ளனர். இந்தியர்கள் ஸ்விகியில் அதிகம் வாங்கிய உணவுப் பொருட்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், அதிக விலைக்கு பொருட்கள் வாங்கியவர்கள் எங்கெங்கு இருக்கின்றனர் என்ற பட்டியலும் சேர்க்கப்பட்டுள்ளது. அதில், பெங்களூருவை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், தீபாவளி சமயத்தில் ஒரே 75 ஆயிரம் வரை மளிகைப் பொருட்களை இன்ஸ்டாமார்ட்டில் வாங்கியுள்ளார்.
அதே ஊரைச் சேர்ந்த இன்னொரு வாடிக்கையாளர், இந்த வருடத்தில் மட்டும் 16 லட்சத்திற்கும் மேல் மளிகைப் பொருட்களை வாங்கியுள்ளார். ஒரே ஆண்டில் ரூபாய் 16 லட்சத்திற்கும் அதிகமாக ஸ்விகி மூலமாக மளிகை பொருட்களை ஒருவர் வாங்கியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரியாணிக்கு முதலிடம்:
உணவுப் பிரியர்களின் ஃபேரட் உணவுப் பொருளான பிரியாணி, ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை ஆர்டர் செய்யப்படுகிறது என்ற தகவலையும், ஸ்விகி தனது பட்டியலில் இணைத்துள்ளது. இதனால், அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவுப் பொருட்களின் பட்டியலில், பிரியாணி முதல் இடத்தில் உள்ளது.
இரண்டாவதாக, தமிழகத்துக்கே உரிய மசாலா தோசை இடம் பெற்றுள்ளது. அடுத்தடுத்த இடங்களில், சிக்கன் ஃப்ரைட் ரைஸ், பன்னீர் பட்டர் மசால் உள்ளிட்ட சுவையான உணவு வகைகள் டாப் லிஸ்டில் உள்ளன. புனேவைச் சேர்ந்த ஒரு நபர், சுமார் 71 ஆயிரம் ரூபாய்க்கு, பர்கர் ஆர்டர் செய்து தனது பணியாளர்களுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார்.