குஜராத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பெய்த கன மழை காரணமாக மின்னல் தாக்கி பல பகுதிகளில் பயிர்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.  அதே நேரத்தில் 20 பேர் பலியாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.






”குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் மோசமான வானிலை மற்றும் மின்னல் காரணமாக பலர் இறந்த செய்தி கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த சோகத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளூர் நிர்வாகம் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 


தெற்கு குஜராத் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் இன்றும் கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு அரபி கடலில் சூறாவளிக்கான சுழற்சி மையம் கொண்டுள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குஜராத் முழுவதும் பெய்த கனமழையால் பயிர்களும் பெரிய அளவில் சேதமடைந்துள்ளன. குஜராத்தில் உள்ள 252 தாலுகாக்களில் 234 தாலுகாக்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக மாநில அவசரநிலை செயல்பாட்டு மையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க


Hardik Pandya: முடிவுக்கு வந்த வதந்திகள்.. மீண்டும் மும்பை இந்தியன்ஸுக்கு பறந்த ஹர்திக் பாண்டியா.. கேப்டனான கில்..!


R. Nataraj IPS : ’முதல்வர் மேல மரியாதை இருக்கு, நான் அவதூறு பரப்பவில்லை’ - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நட்ராஜ் ஏபிபி நாடுவிற்கு எக்ஸ்குளூசிவ்!


CM Stalin: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - வி.பி. சிங் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு