Flu Fever : அதிகரிக்கும் ப்ளூ காய்ச்சல்.. இந்தியாவில் மருந்துகளின் விற்பனை அதிகரிப்பு... ஒரே மாதத்தில் இவ்வளவு மாத்திரைகள் விற்பனையா...?

கடந்த ஜனவரி மாதத்தை விட பிப்ரவரியில் 25% மருந்துகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Continues below advertisement

Flu Fever : கடந்த ஜனவரி மாதத்தை விட பிப்ரவரியில் 25% மருந்துகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Continues below advertisement

மருந்து விற்பனை அதிகரிப்பு

நாட்டில் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்களின் பாதிப்பு அதிகரித்து வருவதால் மருந்துகள் விற்பனை கடந்த ஜனவரி மாதத்தை விட பிப்ரவரி மாதத்தில் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிப்ரவரி மாதம் நோய் தொற்று எதிர்ப்பு மருந்துகள்  12.5 % அதிகரித்து ரூ.22,883 கோடியாகவும், இருமல் மருந்துகள் 8.1% அதிகரித்து ரூ.14,880 கோடியாகவும், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் 26.1% அதிகரித்து ரூ.2,766 கோடியாக இருந்தது. மேலும், நுரையீரலில் வீக்கத்தைத் தடுக்கும் சிப்லாவின் புட்கார்ட் மருந்து 23.3% அதிகரித்து ரூ.2,385 கோடியாகவும், வலி நிவாரணி மருந்துகள் 10.7% அதிகரித்து ரூ.12,898 கோடியாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ப்ளூ காய்ச்சல்

நாடு முழுவதும் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக  வானிலை மாற்றம் காரணமாக வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இது குறைந்தபட்சம் ஒரு வாரம் நீடிக்கிறது. மேலும் காய்ச்சல் மறைந்தாலும், இருமல், குமட்டல், வாந்தி போன்ற பிற அறிகுறிகள், தொண்டை புண் மற்றும் உடல் வலி முழுமையாக குணமடைய அதிக நேரம் எடுக்கிறது. NCDC இன் தகவலின்படி, இந்த வழக்குகளில் பெரும்பாலானவை H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், கடந்த ஜனவரி மாதத்தை விட பிப்ரவரி மாதத்தில் மருந்துகளின் விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  காய்ச்சல் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து இருப்பதால் மக்கள் உடனே குணமடைய நுண்ணுயிர் எதிர்ப்பிகளை (Antibiotics) உட்கொள்கிறார்கள். ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

அதன்படி, அசித்ரோமைசின், அமோக்ஸிக்லாவ், அமோக்ஸிசிலின், நார்ஃப்ளோக்சசின், சிப்ரோஃப்ளோக்சசின், ஆஃப்லோக்சசின், லெவ்ஃப்ளோக்சசின், ஐவர்மெக்டின் ஆகிய மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை

இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் வராமல் தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.  அதன்படி,

  • உங்கள் கைகளை அடிக்கடி கழுவு வேண்டும்.
  • வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் குளிக்க வேண்டும்
  • முகக் கவசம் அணிதல், அதிகம் கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
  • தும்பல், இருமல் வரும்போது மூக்கு மற்றும் வாயை மூட வேண்டும்
  • வாய் மற்றும் மூக்கை தொடுவதை தவிர்க்க வேண்டும்
  • குளிர்ந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
  • காய்ச்சல் மற்றும் உடல்வலி ஏற்பட்டால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க

Airlines : நடுவானில் விமானத்தில் சிகரெட் புகைத்த இளம்பெண்.. போலீசார் செய்த அதிரடி..

தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த சிறுத்தைகள் காட்டுக்குள் விடுவிப்பத்தில் சிக்கலா? புலிகள் நடமாட்டத்தை கண்காணிக்கும் குழுவினர்...

Continues below advertisement
Sponsored Links by Taboola