வடமேற்கு மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவைச் சுற்றியுள்ள பகுதியில் புலிகளின் நடமாட்டத்தால்,  இடமாற்றம் செய்யப்பட்ட ஆப்பிரிக்க சிறுத்தைகளை காடுகளில் விடுவிப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த வார இறுதியில் ஒன்று அல்லது இரண்டு சிறுத்தைகள் வனப்பகுதியில் விடப்படும் என்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள வனத்துறை உயர் வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த வாரம், ராஜஸ்தான் வனத் துறையினர், ராத்தம்பூர் தேசிய பூங்காவில் புலிகளைக் கண்காணித்துக்கொண்டிருந்தபோது, ​​சம்பல் ஆற்றைக் கடந்து, ராஜஸ்தானில் இருந்து மத்திய பிரதேசத்திற்குள் நுழைந்த புலியைப் பற்றி மொரேனாவின் வன அதிகாரிக்கு (DFO) தகவல் கொடுத்தனர். குனோ பால்பூர் தேசிய பூங்காவில், நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட எட்டு சிறுத்தைகளும் தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட12 சிறுத்தைகளும் உள்ளன. இந்த தகவல் பலரை கவலையடையச் செய்துள்ளது, புலியின் நடமாட்டம் சிறுத்தைகள் காடுகளில் விடுவிக்கப்பட்டவுடன் அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். இதற்கு முன்னதாக, சிறுத்தை கண்காணிப்புக் குழு சில சிறுத்தைகளை காடுகளில் விடுவிக்க அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  


வனத்துறையின் உயர்மட்ட வட்டாரங்கள் கூறும்போது, ​​தப்பி வந்த  புலி, குனோ தேசிய பூங்காவைச் சுற்ற அல்லது மத்திய பிரதேசத்தில் இதுவரை தென்படவில்லை என தெரிவித்துள்ளனர். தென்னாப்பிரிக்க மற்றும் நமீபிய நிபுணர்கள் ஆலோசனை நடத்தியதில், புலியினால் சிறுத்தைகளுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.


எல்டன் மற்றும் ஃப்ரெடி எனப்படும் சிறுத்தைகள் காட்டுக்குள் விடுவிக்கப்படும் என கூறியுள்ளனர்.  விடுவிக்கப்படும் சிறுத்தைகள் ரேடியோ காலர் மற்றும் செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்புகள் மூலம் கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.  நமீபியாவில் இருந்து குனோவுக்கு எட்டு சிறுத்தைகள் கொண்டுவரப்பட்டு செப்டம்பர் 17, 2022 அன்று விடுவிக்கப்பட்டன, மேலும் 12 சிறுத்தைகள் தென்னாப்பிரிக்காவில் பிப்ரவரி 18-ஆம் தேதி கொண்டு வரப்பட்டது.     


நிலப்பரப்பில் அதி வேகம் ஓடக் கூடிய திறன் பெற்ற சிறுத்தைகள் (cheetahs) ஏற்கனவே இந்தியாவில் இருந்துள்ளது. ஒரு காலத்தில்  இதன் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக இருந்துள்ளது. ஆங்கிலேயர் வருகையால் வேட்டையாடப்பட்டதன் காரணத்தால் இந்தியாவில் சிறுத்தை இனத்தின் எண்ணிக்கை குறைந்துபோனது. பின்பு, இந்தியாவில் சிறுத்தைகள் இல்லாமலே போனது. தற்போது  ப்ராஜெட்க் டைகர் (’Project Tiger') மூலம் இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.