Airlines : கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தின் கழிவறையில் புகைபிடித்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். 


சமீப காலமாகவே, விமான நிலையங்களில் தொடர் சர்ச்சை அரங்கேறி வருகிறது. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவத்தில், குற்றம்சாட்டப்பட்ட நபர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.  தற்போது பெண் ஒருவர் விமானத்தில் புகைப்பிடித்ததால் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


விமானத்தில் புகைபிடித்த இளம்பெண்


மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா (24). இவர் மார்ச் 5ஆம் தேதி கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்டார். இதற்காக இண்டிகோ விமான நிலையத்தில்  முன்பதிவு செய்த அவர், மார்ச் 5ஆம் தேதி கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டார்.


அந்த விமானம் பெங்களூருவுக்கு வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு, அதில் பயணித்த பிரியங்கா விமான கழிவறைக்கு சென்றார். அங்கு அவர் சிகரெட் புகைத்துள்ளார். பின்னர், அந்த சிகரெட்டை அணைக்காமல் அங்கிருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டுள்ளார். சிகரெட் புகை நெடி வருவதை அறிந்த விமான பணிப்பெண் கழிவறைக்கு சென்று பார்த்துள்ளார்.


அப்போது அந்த சிகரெட்டை தண்ணீர் ஊற்றி அணைத்து இது பற்றி பெங்களூரு விமான நிலையத்தில் தகவல் கொடுத்தார். அதன்பின், விமானம் பெங்களூருவில் தரையிறங்கியது. உடனே போலீசார் விமானத்தில் சிகரெட் புகைத்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பவர், ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


பெண் பயணி மீது சக பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை என ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் ரூ. 30 லட்சம் அபராதம் விதித்தது. பணியை செய்யத் தவறியதற்காக விமானத்தின் பைலட் - இன் கமாண்டின் உரிமம் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. அதே நேரத்தில் ஏர் இந்தியா விமான சேவை இயக்குனருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


Scotch Whisky: 'குடிமகன்கள்' அட்ராசிட்டி.. ஒரு வினாடிக்கு 53 பாட்டில் ஸ்காட்ச் விஸ்கி இறக்குமதி..! பிரான்ஸை பின்னுக்கு தள்ளிய இந்தியா..!


Watch Video: அய்யய்யோ..! திடீரென தரைமட்டமான அடுக்குமாடி கட்டிடம் - அலறியடித்து ஓடும் மக்கள்..!


Australia PM Visit: 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வரும் ஆஸ்திரேலிய பிரதமர்..! கையெழுத்தாகும் முக்கிய ஒப்பந்தங்கள் என்ன?