அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான தடை நீடித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு தடைக்கோரி ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவு. டிசம்பர் 6ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் போது இரு தரப்பு வாதங்களை கூற நீதிபதிகள் உத்தரவு.
மேலும் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நவம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவுக்கு தடை கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு, பொதுக்குழு தேர்தல் தொடர்பாக அதிமுக உறுப்பினர் வைரமுத்து, உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த நவம்பர் 21 ஆம் தேதி விசாரணையின் போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் சுதான்சு தூலியா ஆகியோர், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்காலத் தடை நீட்டித்து உத்தரவிட்டு, பன்னீர்செல்வம் உள்ளிட்ட மனுதாரர்கள் மற்றும் பழனிச்சாமி உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் எழுத்துப் பூர்வ வாதங்களையும், கூடுதல் ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை நவம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ஆனால், நவம்பர் 30 ஆம் தேதி விசாரணை எனக் கூறிவிட்டு, உச்சநீதிமன்ற விசாரணைப் பட்டியலில் வழக்கு விசாரணை டிசம்பர் 6 எனக் காட்டுவதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் நீதிபதி தினேஷ் மகேஷ்வரி அமர்வில் முறையிடப்பட்டது.
எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அறியமா சுந்தரம், "வழக்கு விசாரணை தள்ளிப்போவதால் கட்சியின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது. வழக்கை அவசர வழக்காக கருதி கடந்த முறை நவம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டது. எனவே நாளை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இல்லையெனில் டிசம்பர் 6 ஆம் தேதிக்கு முன்னதாக விசாரிக்கப் பட வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், டிசம்பர் 6 ஆம் தேதி தன்னால் ஆஜராக முடியாது எனவே வழக்கை 13 ஆம் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இருதரப்பையும் கேட்ட நீதிபதிகள், உச்சநீதிமன்ற அமர்வுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் வழக்கை நாளை விசாரிக்க முடியாது. நீங்கள் கூறுவது போல் எங்களால் செயல்பட முடியாது. எதுவானாலும் டிசம்பர் 6 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் போது கூறுங்கள் என திட்டவட்டமாக தெரிவித்து இருதரப்பு கோரிக்கையையும் நிராகரித்தனர்.
Kerala Lesbian Couple : இணையத்தை கலக்கும் கேரளாவின் லெஸ்பியன் ஜோடி.. எதிர்ப்பு முதல் வெற்றி வரை..