கேரளாவைச் சேர்ந்த லெஸ்பியன் ஜோடியான ஆதிலா நஸ்ரின் மற்றும் பாத்திமா நூரா ஆகியோரை அவர்களது பெற்றோர்கள் பிரித்த பின் கேரள நீதிமன்றத்தால் இணைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களது திருமண போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


திருமண போட்டோஷூட்


ஆதிலா ஒரு ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தொடர்ந்தார நிலையில், அவரது குடும்பத்தினரால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பாத்திமா நீதிமன்றத்தில் ஆஜரானார், அவர்கள் ஒன்றாக வாழ விரும்புவதை அறிந்த நீதிமன்றம், இருவரும் இணைய அவர்களுக்கு அனுமதி வழங்கியது. இப்போது, இருவரும் மணப்பெண்களாக போஸ் கொடுத்த திருமண போட்டோஷூட் மீண்டும் வைரலாகியுள்ளது. வெள்ளி நகைகளால் அலங்கரிக்கப்பட்டு, பிரவுன் மற்றும் நீல நிற லெஹெங்காக்கள் அணிந்திருந்த அவர்கள் எர்ணாகுளம் மாவட்டத்தின் கடலோரத்தில் ஓர் அலங்கரிக்கப்பட்ட மேடையில் பரஸ்பரம் மோதிரங்கள் மற்றும் ரோஜா மாலைகளை மாற்றிக்கொண்டுள்ளனர்.






திருமணம் செய்துகொள்ள சட்டமில்லை


"திருமணம் செய்துகொள்ள ஆசை இருக்கிறது ஆனால் சட்டம் இல்லை எனும்போது, அதுபோன்ற போட்டோஷூட் எடுக்கலாம் என்ற இந்த யோசனை சுவாரஸ்யமாக இருந்தது. அதனால் முயற்சித்தோம்" என்று ஆதிலா பிபிசியிடம் கூறினார். தற்போது, பால்புதுமையினர் திருமணத்திற்கு இந்தியாவில் சட்ட அனுமதி இல்லை. மற்றும் உச்சநீதிமன்றம் இது தொடர்பான மனுக்களை பரிசீலித்து வருகிறது என்று அதிலா பிபிசியிடம் தனது விரக்தியை வெளிப்படுத்தினார். இந்தியாவில் உள்ள எல்லா படிவங்களும் கணவன், மனைவி அல்லது தந்தையின் பெயரைத்தான் கேட்கிறது என்று கூறினார். இவற்றை கொள்ளும்போது இது இன்னும் சிக்கலாக உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்: வரதட்சணையாக பைக் வாங்கி தராத மாமனார்: ஆத்திரத்தில் மனைவி மீது கணவர் செய்த வெறிச்செயல்...!


தம்பதியை எதிர்ப்பவர்கள்


ஆதிலாவும் பாத்திமாவும் தங்கள் குடும்பத்துடன் நல்ல உறவிலும் இல்லை என்று குறிப்பிட்டனர். உண்மையில், அவர்களது குடும்பங்கள் இன்னும் அவர்களது உறவு பிரித்துவிடும் என்று நம்புகிறார்கள். இருவரும் சவூதி அரேபியாவில் பள்ளிப் பருவத்தில் இருந்தே ஒன்றாக இருந்துள்ளனர். பாத்திமாவுக்கும் ஆதிலாவுக்கும் பல ஆதரவாளர்களும் நலம் விரும்பிகளும் இருந்தாலும், அவர்களை விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள்.






படித்து முடித்து வேலை தேடுங்கள்


பாத்திமாவும் ஆதிலாவும் பால் புதுமையினர் சமூகத்தில் உள்ளவர்கள் நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்குமாறு அறிவுறுத்துகிறார்கள். உதவிக் குழுக்களிடமிருந்து அவர்கள் பெற்ற அறிவுரையும் அதுதான்- “உங்கள் கல்வியை முடித்துவிட்டு ஒரு வேலையைத் தேடுங்கள்” என்கிறார்கள். பாத்திமா பிபிசியிடம் வேலையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். வேலை கிடைப்பதால் கிடைக்கும் நிதி பாதுகாப்பு என்பது வேறு யாராலும் தர முடியாத ஒன்று என்று அவர் மேலும் கூறினார்.