வீடியோகான் நிறுவனத்திற்கு முறைகேடாக கடன் வழங்கிய வழக்கில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் இருவரையும் சி.பி.ஐ. (The Central Bureau of Investigation (CBI)) கைது செய்துள்ளது.
முன்னணி தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக 2012 ஆம் ஆண்டு சந்தா கோச்சார் பதவி வகித்தார். அப்போது, வீடியோகான் (Videocon Group)நிறுவனத்திற்கு முறைகேடாக சுமார் ரூ. 3,250 கோடி கடன் வழங்கியுள்ளார்.
இதன் மூலம் சந்தாவின் கணவர் தீபக் மற்றும் அவரது உறவினர்கள் பெரும் ஆதாயம் கிடைத்துள்ளது. இது குறித்து தகவல் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், ஐ.சி.ஐ.சி.ஐ-யின் வங்கி தலைமை பொறுப்பில் இருந்து சந்தா கோச்சார் நீக்கப்பட்டார். இதை தொடர்ந்து, சந்தா கோச்சார், தீபக் கோச்சார் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணை சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சரை சிபிஐ நேற்றிரவு கைது செய்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சந்தா மற்றும் வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் தூத் மற்றும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அதில், ஆவணங்கள், மின்னணு சான்றுகள், ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் விசாரணை தொடங்கியது. விசாரணையில் குற்றம் உறுதியானதை தொடர்ந்து 2018 அக்டோபர் மாதம் சந்தா கோச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இவருடன் தீபக் கோச்சார், வீடியோகான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வேணுகோபால் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. தொடர்ந்து தீபக் கோச்சாருக்கு சொந்தமான ரூ.78 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
நடந்தது என்ன?
சந்தா கோச்சார் வீடியோகான் குழுமத்திற்கு தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் வங்கி கடன் வழங்கியிருந்தார். ரூ.3,250 கடனின் சந்தா தொகை தீபக் கோச்சார் நிறுவனத்திற்கு தவணையாக செலுத்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
கடந்த ஆண்டு இந்த மோசடி வழக்கில் சந்தா கோச்சார் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க..
பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள்… அவரை நினைவு கொள்ள வேண்டிய சிந்தனைகள் இங்கே!