உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்தியா உள்பட உலகெங்கிலும் உள்ள நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கொண்டாட்டம் ஏற்கனவே சிறப்பாக தொடங்கிவிட்டது. இந்த நிலையில், உலகிலேயே மிகப்பெரிய கிறிஸ்தவ தேவாலயங்களை கீழே காணலாம்.
- உல்ம் மின்ஸ்டர் தேவாலயம், ஜெர்மனி (8260 சதுர மீட்டர்)
ஜெர்மனி நாட்டில் அமைந்துள்ள உல்ம் சிட்டியில் அமைந்துள்ள உல்ம் மின்ஸ்டர் தேவாலயம்தான் உலகிலேயே 10வது பெரிய தேவாலயம் ஆகும். இந்த தேவாலயம் மொத்தம் 8 ஆயிரத்து 260 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது ஆகும். இந்த தேவாலயத்தின் உச்சிக்கு செல்ல மொத்தம் 768 படிகள் உள்ளது. தேவாலயத்தின் உச்சியில் நின்று ஒட்டுமொத்த நகரத்தின் அழகையும் ரசிக்கலாம். 1377ம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்ட இந்த தேவாலயம் 1890ம் ஆண்டுதான் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது.
- பாசிலிகா ஆப் அவர் லேடி பில்லர், அரகோன், ஸ்பெயின் ( 8318 சதுர மீட்டர்)
ஸ்பெயின் நாட்டின் அரகோன் நகரில் அமைந்துள்ள பாசிலிகா ஆப் அவர் லேடி பில்லர் தேவாலயம்தான் உலகின் 9வது மிகப்பெரிய தேவாலயம் ஆகும். இந்த தேவாலயத்தின் மொத்த பரப்பளவு 8 ஆயிரத்து 318 சதுர மீட்டர் ஆகும். இந்த தேவாலயத்தின் உள்ளே வியக்க வைக்கும் நான்கு மிகப்பெரிய தூண்கள் அமைந்துள்ளது. தேவாலயத்தின் பிரார்த்தனை செய்யும் கூடத்தில் மேரி மாதா சிலை அமைந்துள்ளது. ஸ்பெயினின் மிகப்பெரிய தேவாலயமாக இது அமைந்துள்ளது.
- சர்ச் ஆப் தி ஹோலி டிரினிடி, சான்டேரம், போர்ச்சுக்கல் ( 8,700 சதுர மீட்டர்)
போர்ச்சுக்கல் நாட்டின் சான்டேரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஹோலி டிரினிட்டி சர்ச் மிகவும் புகழ்பெற்றது. இந்த நூற்றாண்டில் அதாவது 2004 முதல் 2007ம் ஆண்டு வரை கிரீஸ் நாட்டு கட்டிட கலைஞரால் கட்டப்பட்ட இந்த தேவாலயம் மொத்தம் 8 ஆயிரத்து 700 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. ஒரே நேரத்தில் இந்த தேவாலயத்தில் 9 ஆயிரம் பேர் வரை பிரார்த்தனை செய்யலாம்.
- லிவர்பூல் கதிட்ரல், லிவர்பூல், இங்கிலாந்து (9687 சதுர மீட்டர்)
இங்கிலாந்து நாட்டில் அமைந்துள்ள லிவர்பூல் கதிட்ரல் 9 ஆயிரத்து 687 சதுர மீட்டர் கொண்டது. லிவர்பூல் தேவாலயம் 189 மீட்டர் உயரம் கொண்ட தேவாலயம் ஆகும். இந்த தேவாலயம்தான் உலகிலேயே மிகவும் உயரமான தேவாலயம் ஆகும். 1904ம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்ட இந்த தேவாலயம் ஒவ்வொரு காலகட்டத்தில் கட்டப்பட்டு 1978ம் ஆண்டு நிறைவு பெற்றது. தேவாலயத்தின் உள்புறம் பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கதீட்ரல் தேவாலயத்தின் அமைந்துள்ள 67 மீட்டர் உயரமான சிகரம்தான் உலகிலேயே மிகவும் கனமான சிகரம் ஆகும்.
- பாசிலிகா ஆப் அவர் லேடி ஆப் லிச்சென், கொனின், போலந்து ( 10,090 சதுரமீட்டர்)
போலந்து நாட்டில் அமைந்துள்ள பாசிலிகா ஆப் அவர் லேடி ஆப் லிச்சென் தேவாலயம் உலகிலேயே மிகப்பெரிய 6வது தேவாலயம் ஆகும். 141.2 மீட்டர் உயரம் கொண்ட இந்த தேவாலயம் 10 ஆயிரத்து 90 மீட்டர் பரப்பளவு கொண்டது. 1994ம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்ட இந்த தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு பிறகே கட்டி முடிக்கப்பட்டது. இந்த தேவாலயத்தில் 365 ஜன்னல்கள், 52 கதவுகள் மற்றும் 12 பகுதிகள் அமைந்துள்ளது.
- மிலன் கதிட்ரல், மிலன், இத்தாலி (10,186 மீட்டர்)
இத்தாலி நாட்டில் அமைந்துள்ள மிலன் கதிட்ரல் தேவாலயம்தான் உலகிலயே 2வது பெரிய கதோலிக் தேவாலயம் ஆகும். கத்தோலிக்க கட்டிட கலைக்கு மிககச்சிறந்த எடுத்துக்காட்டு இந்த தேவாலயம் ஆகும். 1386ம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்ட இந்த தேவாலய பணிகள் 5 நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் முடிவுக்கு வந்தது. இந்த தேவாலயத்தில் ஒரே நேரத்தில் 40 ஆயிரம் பேர் வரை பிரார்த்தனை செய்ய முடியும். 157 மீட்டர் உயரம் கொண்ட இந்த தேவாலயம் மொத்தம் 10 ஆயிரத்து 186 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது ஆகும்.
- கதிட்ரல் ஆப் செயின்ட் ஜான் தி டிவைன், நியூயார்க், அமெரிக்கா ( 11,200 சதுரமீட்டர்)
உலகிலேயே மிகப்பெரிய ஆங்கிலிகன் கதிட்ரல் தேவாலயம்தான் இந்த கதிட்ரல் ஆப் செயின்ட் ஜான் சர்ச். நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள இந்த தேவாலயம் மொத்தம் 11 ஆயிரத்து 200 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது ஆகும். 1892ம் ஆண்டு இந்த தேவாலயத்தை அமெரிக்காவின் ஜார்ஜ் ஹெய்ன்ஸ் மற்றும் கிறிஸ்டோபர் கிராண்ட் லாபரேஜ் இருவரும் வடிவமைத்துள்ளனர். இந்த தேவாலயம் மொத்தம் 162 மீட்டர் உயரம் கொண்டது ஆகும். இந்த தேவாலயத்தின் பிரதான கதவு வெண்கலத்தால் செய்யப்பட்டது.
- செவிலி கதிட்ரல், செவிலி, ஸ்பெயின் ( 11,520 சதுர மீட்டர்)
ஸ்பெயின் நாட்டில் உள்ள செவிலி சிட்டியில் உள்ள செவிலி கதிட்ரல்தான் உலகிலேயே மிகப்பெரிய கதிட்ரல் தேவாலயம் ஆகும். 11 ஆயிரத்து 529 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது இந்த தேவாலயம் ஆகும். யுனெஸ்கோ பழமையான பாரம்பரிய சின்னமாக இந்த தேவாலயத்தை அறிவித்துள்ளது. இந்த தேவாலயம் மொத்தம் 42 மீட்டர் உயரம் கொண்டது ஆகும். இந்த தேவாலயம் 1402ம் ஆண்டு முதல் 1528ம் ஆண்டு வரை கட்டப்பட்டது.
- பாசிலிகா ஆப் தி நேஷனல் ஷ்ரைன் ஆப் அவர் லேடி ஆப் அபரேசிடா, அபரேசிடா, பிரேசில் ( 12,000 சதுர மீட்டர்)
பிரேசில் நாட்டில் அமைந்துள்ளது அபரேசிடா உலகிலேயே 2வது மிகப்பெரிய தேவாலயம் ஆகும். இந்த தேவாலயம் மொத்தம் 12 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவு கொண்டது ஆகும். 1834ம் ஆண்டு 1888ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த தேவாலயம் கட்டப்பட்டது.
- செயின்ட் பீட்டர்ஸ் பாசிலிகா, வாடிகன் சிட்டி ( 15,160 சதுரமீட்டர்)
உலகிலேயே மிகப்பெரிய தேவாலயம் மற்றும் புகழ்பெற்ற தேவாலயமாக இருப்பது வாடிகன் நகரில் அமைந்துள்ள செயின்ட் பீட்டர்ஸ் பாசிலிகா தேவாலயம் ஆகும். 186 மீட்டர் நீளம் கொண்ட இந்த தேவாலயம் 15 ஆயிரத்து 160 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது ஆகும். இந்த தேவாலயத்தின் மிகப்பெரிய பிரார்த்தனை கூடத்தில் ஒரே நேரத்தில் 20 ஆயிரம் பேர் வரை பிரார்த்தனை செய்ய முடியும். கி.மு. 320ம் ஆண்டில் முதன்முதலாக இந்த தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. பின்னர், 15ம் நூற்றாண்டில் மறுவடிவமைக்கப்பட்டது. பல்வேறு அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் கொண்ட இந்த தேவாலயத்தில் மிகப்பெரிய ஆச்சரியங்களும், அதிசயங்களும் அடங்கியுள்ளது.