ஒரு வருடத்திற்குப் பிறகு யானைகள் தங்கள் பராமரிப்பாளரைச் சந்திக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நாட்டில் கொலை, கொள்ளை, தற்கொலைகள், பாலியல் வன்கொடுமை போன்ற செய்திகள் தினமும் வருவது அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. டிவியை பார்த்தாலும், தினசரி பேப்பரை திறந்தாலும் இந்த செய்திகளே அதிகம் உள்ளன. பொதுமக்களும், எதிர்மறையான செய்திகளை தினமும் படித்து வருவதால் அவர்களுக்குள்ளும் ஒருவித பயமும், அதிர்ச்சியும் ஏற்படுகிறது. இந்த செய்திகளுக்கு இடையே, தற்போது தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால், மூன்றாவது கண் என்று கூறப்படும் கேமராவால், பல்வேறு சுவாரஸ்யமான, அதிர்ச்சிகரமான சம்பவத்தின் காட்சிகளும் கிராமம் முதல் நகரம் வரை உள்ள மக்களுக்கு உடனே தெரிந்து விடுகிறது. இந்த வகையான பல வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி, உலகத்தின் எந்த மூலைகளில் இருக்கும் மனிதர்களுக்கும் சென்று சேர்ந்து விடுகிறது. Watch Video: மகளுக்கு வாங்கிய செல்போன்.. DJ இசையுடன் குதிரை ஊர்வலம்.. டீ விற்கும் தந்தையின் நெகிழ்ச்சி கதை..
அந்த வகையில், யானைகள் தங்கள் பராமரிப்பாளரை ஒரு வருடத்திற்கும் பிறகு மீண்டும் சந்திக்கும்போது, சந்தோஷத்துடன் சத்தத்தை வெளிப்படுத்தி பாசத்தை காட்டும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோக்களுக்கு பெயர்போன வனத்துறை அதிகாரி சுஷாந்த நந்தா இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அற்புதமான காட்சி இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். Watch Video: ”பிஜிலி பிஜிலி” பாட்டுக்கு ரன்வீரோடு நடனமாடிய சீக்காவின் வைரல் வீடியோ
வீடியோவை பார்க்க:
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்