தமிழ்நாடு:


* நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டபடி தேமுதிக தனித்து போட்டியிடுவது உறுதி என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.


* கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் வடிவேலுக்கு எஸ் ஜீன் டிராப் உறுதியானதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.


* தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஆறு வங்கிக்கணக்குகளை முடக்கி தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


* குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வில் மீண்டும் திருக்குறள் சேர்ப்பு : டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி தகவல் 


* ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஆவின் நெய் மற்றும் வெண்ணெய்யை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என  இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு


இந்தியா:


* ஜனவரி 10 ம் தேதி முதல் முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் : பிரதமர் மோடி அறிவிப்பு 


* ஜனவரி 3 ம் தேதி முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி, முதியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி : மத்திய அரசு தகவல் 


* வேளாண் சட்டங்கள் மீண்டும் நிறைவேற்றப்படும் - மத்திய அமைச்சர் தகவலால் பரபரப்பு 


* ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு மத்திய குழு வருகை 


உலகம்:


* கிறிஸ்துமஸ் வார இறுதியில் உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் கிட்டத்தட்ட 4,300 க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளதாக அதிர்ச்சிகர தகவல் கிடைத்துள்ளது.


* கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. அமெரிக்க அதிபரை திட்டிய நபரால் பரபரப்பு!


* ரஷ்யாவில் மாஸ்கோ நீதிமன்றம் ஒன்று கூகுள் நிறுவனத்தின் மீது சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், பேஸ்புக் நிறுவனத்தின் மீது சுமார் 27 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் அபராதமாக விதித்துள்ளது.


* 2022 தொடக்கமே விண்கல்லோடுதான்.. நாசா கொடுத்த எச்சரிக்கை!


விளையாட்டு:


*  தென்னாப்பிரிக்கா - இந்தியா பாக்சிங் டே டெஸ்ட் இன்று தொடங்கும்


* அயர்லாந்து - அமெரிக்கா அணிகளுக்கு இடையான முதல் ஒருநாள் போட்டியில் அம்பயருக்கு கொரோனா : போட்டி ரத்து 


* கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த ஹர்பஜன் சிங் அரசியலில் பிரவேசம் செய்யப்போகிறார் என்ற தகவல் கசிந்த நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண