1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றதை வைத்து 83 படம் தயாராகி உள்ளது. மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையில், பெரிய திரையில் வெளியிட வேண்டுமென காத்திருந்து டிசம்பர் 24-ம் தேதி தியேட்டரில் வெளியானது. கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரது வரவேற்பையும் பெற்றிருக்கிறது 83 திரைப்படம். 


படத்தின் முதல் நாள் காட்சியை படத்தின் ரியல் மற்றும் ரீல் நட்சத்திரங்கள் திரையரங்கிற்கு சென்று ஒன்றாக பார்த்துள்ளனர். படத்தைப் பார்த்த ரியல் இந்திய அணி வீரர்கள் படக்குழுவுக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். தற்போது தமிழ் கிரிக்கெட் வர்ணனையில் பிஸியாக இருக்கும் ஸ்ரீகாந்த்தான், 1983 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஒரே தமிழக வீரர். படத்தில்  சீக்காவாக நடித்திருக்கும் ஜீவா அப்ளாஸ் வாங்குகிறார். ஒரு குறிப்பிட்ட காட்சியில், காமெடி, அழுகை என எமோஷன்கள் மாறி மாறி வந்தாலும் கச்சிதமாக நடித்திருக்கிறார்.


இந்நிலையில், திரைப்பட காட்சியை பார்த்துவிட்டு கொண்டாடியுள்ள ரியல், ரீல் நட்சத்திரங்களின் டான்ஸ் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. வழக்கமாக சுறுசுறுப்பான பேச்சுக்கு பெயர் போன ஸ்ரீகாந்த், ரன்வீரோடு ஆடிய டான்ஸ் வைரலாகி உள்ளது.



இன்றிலிருந்து சுமார் 38 ஆண்டுகள் முன்னோக்கி, அதாவது 1983ம் ஆண்டில் இருந்து இந்திய அணியை பார்த்தால் “இது தேறாது… அது அவ்ளோதான்.. கதை முடிஞ்சது” என்று சொல்வார்களே அதுபோன்றுதான் இருந்தது. ஆனால், அந்த முடிந்த கதையை சகாப்தமாக மாற்றிய எழுதியவர்தான் கபில்தேவ். இதனால்தான் இந்திய கிரிக்கெட் வரலாற்றை கபில்தேவிற்கு முன், கபில்தேவிற்கு பின் என்றே பிரிக்கலாம். அப்பேற்பட்ட சாதனை வீரனான கபில்தேவின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் விதமாக ரன்வீர்சிங் நடிப்பில் உருவாகியுள்ள “83” படம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.




இந்திய கிரிக்கெட்டிற்கு கங்குலி, தோனி என்று ஜாம்பவான் கேப்டன்கள் இருந்தாலும், தன்னம்பிக்கையே இல்லாத, துளியளவும் கிரிக்கெட் காதலே இல்லாத அணியை அழைத்துக்கொண்டு உலககோப்பையை வென்றவர் கபில்தேவ். அதனால்தான இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் கபில்தேவிற்கு பிறகு பிரகாசமாக ஒளிரத்தொடங்கியது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண