Watch Video: மகளுக்கு வாங்கிய செல்போன்.. DJ இசையுடன் குதிரை ஊர்வலம்.. டீ விற்கும் தந்தையின் நெகிழ்ச்சி கதை..

டீ விற்பவர் தனது மகளுக்கு 12,500 ரூபாய் மதிப்பிலான மொபல்போனை குதிரை வண்டியில் டிஜே இசையுடன் கொண்டு சென்றுள்ளார் இந்த பாசத் தந்தை

Continues below advertisement

மத்திர பிரதேசத்தில் டீ விற்பனையாளர் ஒருவர் தனது மகளுக்கு மொபைல் போன் வாங்கியதைக் கொண்டாடி, குதிரை டிரம் மற்றும் டிஜே இசைக்கு மத்தியில் அதை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

நாட்டில் கொலை, கொள்ளை, தற்கொலைகள்,  பாலியல் வன்கொடுமை போன்ற செய்திகள் தினமும் வருவது அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. டிவியை பார்த்தாலும், தினசரி பேப்பரை திறந்தாலும் இந்த செய்திகளே அதிகம் உள்ளன. பொதுமக்களும், எதிர்மறையான செய்திகளை தினமும் படித்து வருவதால் அவர்களுக்குள்ளும் ஒருவித பயமும், அதிர்ச்சியும் ஏற்படுகிறது. இந்த செய்திகளுக்கு இடையே, தற்போது தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால், மூன்றாவது கண் என்று கூறப்படும் கேமராவால், பல்வேறு சுவாரஸ்யமான, அதிர்ச்சிகரமான சம்பவத்தின் காட்சிகளும் கிராமம் முதல் நகரம் வரை உள்ள மக்களுக்கு உடனே தெரிந்து விடுகிறது. இந்த வகையான  பல வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி, உலகத்தின் எந்த மூலைகளில் இருக்கும் மனிதர்களுக்கும் சென்று சேர்ந்து விடுகிறது. மேலும் படிக்க: Watch Video: இது எப்படி இருக்கு.? இது தொப்பி கலாய்.! ஜித்து ஜில்லாடி, இந்த யானை கில்லாடி..! வைரல் வீடியோ

அந்த வகையில், மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரியில் டீ விற்பனையாளர் ஒருவர் தனது மகளுக்கு ₹12,5000 மதிப்பிலான மொபைல் போன் வாங்கியதைக் கொண்டாடி, டிரம் மற்றும் டிஜே இசைக்கு மத்தியில் அதை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். வைரலாகி வரும் இந்த வீடியோவில் அவரது மகளும் மற்ற குழந்தைகளும் குதிரை வண்டியில் அமர்ந்திருப்பதைக் காணலாம். தனது 5 வயது மகள் மதுவை கைவிடுமாறும், அந்த பணத்தை சேமித்து தொலைபேசி வாங்குமாறும் கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார். மேலும் படிக்க: Watch Video: மேலே இழுத்து சென்ற காத்தாடி.. காயமடைந்த இளைஞர்..வெளியான அதிர்ச்சி வீடியோ!

 

வீடியோவை பார்க்க:

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement