Edappadi Palanisamy : திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி.. சாடிய எடப்பாடி பழனிசாமி


அப்போது, அதிமுகவில் இருந்த சிலர் பாஜகவில் இணைந்தது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஈபிஎஸ், "இது ஜனநாயக நாடு யாரு வேண்டுமானாலும் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் போகலாம்" என்றார். திமுகவினர் வாரிசு அரசியல் செய்வதாக அதிமுகவினர் கூறுகின்றனர். ஆனால் அதிமுகவை சேர்ந்த ஜெயக்குமார் அவர் மகனுக்கு சீட் கேட்கிறார் இது வாரிசு அரசியல் இல்லையா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு,  "அரசியல் வாரிசு என்றால் புரிந்துகொள்ள வேண்டும். சீட் கொடுப்பது அல்ல. தலைமைப் பொறுப்பு. திமுக தலைவராக கருணாநிதி இருந்தார், அதன்பின் ஸ்டாலின் இருக்கிறார். அதன்பின் உதயநிதி ஸ்டாலின் வர முயற்சி செய்கிறார்கள் இதுதான் வாரிசு அரசியல். ஒரு குடும்பத்திற்கு போகக்கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை. திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்த வரையில் வாரிசு அரசியல், குடும்ப கட்சி. அது ஒரு கார்ப்பரேரேட் கம்பெனி. அதிமுகவில் என்னைப்போல் சாதாரண தொண்டனும் உயர் நிலைக்கு வர முடியும். அது அதிமுகவில் மட்டும்தான் முடியும்” என்றார். மேலும் படிக்க


Kamalhaasan: ஒருவனும் முழுநேர அரசியல்வாதி கிடையாது.. கூட்டணி குறித்து கமல்ஹாசன் வைத்த ட்விஸ்ட்!


நடிகர் கமல்ஹாசன் தலைவராக உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி இன்றோடு 7 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனைத் தொடர்ந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் கொடியேற்றினார். தொடர்ந்து தொண்டர்களிடையே பேசிய கமல்ஹாசன் அனல் பறக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்தார். 


அப்போது, “இந்த 7 ஆண்டுகள் எப்படி கடந்தது என தெரியவில்லை என சொல்ல முடியாது. அந்த அளவுக்கு ஒவ்வொரு கணமும் எனக்கு புரிந்தது, தெரிந்தது. நேர்மையும், உத்வேகமும் தான் என்பது எனக்கு தெரிந்தது என்றார். மேலும் படிக்க


7 Years of MNM: 7 ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்.. தேவை அதிகரித்து வருவதாக கமல் பெருமிதம்!


2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி காலை அப்துல்கலாம் குடும்பத்தினரிடம் ஆசி பெற்றார். தொடர்ந்து அப்துல்கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ராமநாதபுரம், பரமக்குடி, மானா மதுரை ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அன்று மாலை 6.30 மணியளவில் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் “மக்கள் நீதி மய்யம்” என்ற கட்சியை அறிவித்து கொடியையும் அறிமுகம் செய்தார். அக்கட்சி இன்று 7வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.  இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க


புது பொலிவுடன் கலைஞர் கருணாநிதி நினைவிடம்.. வருகின்ற 26ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர்..!


கடந்த 2021ம் ஆண்டு முதல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் பின்புறத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ரூபாய் 39 கோடி செலவில் நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்றது. தொடர்ந்து,  அவரது சிந்தனைகள், சிந்தாந்தங்கள், சாதனைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் கருணாநிதி நினைவிடம் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்ததன் அடையாளமாக உதயசூரியன் போன்று முகப்பில் கருணாநிதி நினைவிடத்தில் 3 வளைவுகள் அமைக்கப்பட்டது. தற்போது வருகின்ற 26ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிட கட்டுமான பணிகள் முடிவுபெற்றுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Teachers Protest: சம ஊதியம் கோரி போராடினால் கைது செய்வதா?- ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுக- அன்புமணி


சமவேலைக்கு சம ஊதியம் கோரி போராடினால் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதா என்று கேள்வி எழுப்பியுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ், ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று வலியுறுத்தி உள்ளார்.மேலும் படிக்க