Arvind Kejriwal: மதுபான கொள்கை முறைகேடு வழக்கு.. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்
டெல்லியில் ஆம் ஆத்மி தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு அமல்படுத்தியது.

டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு அமல்படுத்தியது. இந்த திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனைத்தொடர்ந்து சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.
Just In




இதில் டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா சிபிஐ-யால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் பலரும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மதுபான கொள்கை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக டெல்லி முதலமைச்சர் அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. கிட்டதட்ட 6 முறை அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
இப்படியான நிலையில் சௌத் குரூப் நிறுவனத்திற்கு மதுபான உரிமம் வழங்க ரூ.100 கோடி ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயருக்கு வழங்கப்பட்டதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்த சௌத் குரூப்பில் இயக்குநர்களாக தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவும் ஒருவராக உள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. இதனைத் தொடர்ந்து கவிதா கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் தான் ஆஜராகாத நிலையில் ஜாமீன் கோரி அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜரான அரவிந்த கெஜ்ரிவாலுக்கு ரூ.15 ஆயிரம் மற்றும் ரூ.1 லட்சம் பிணையத்தொகை செலுத்தி ஜாமீன் பெற்றார்.