டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்றத்தில் (இன்று) வியாழக்கிழமை காலை ஏற்பட்ட சிறிய வெடிவிபத்தில் ஒருவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைத்தொடர்ந்து நடந்த முதற்கட்ட  விசாரணையில், மடிக்கணினியின் பேட்டரியில் வெடிப்பு காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டாலும், வெடிப்புக்கு உண்மையான காரணம் டிபன் வெடிகுண்டு என்று ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 


விரிவான தவலின்படி, நீதிமன்ற அறை எண் 102ல் வைக்கப்பட்டிருந்த பையில் வெடி விபத்து ஏற்பட்டது. மடிக்கணினி தரையில் கிடப்பதைக் காட்டும் வீடியோக்கள், போலீசார் அங்கு விரைந்து செல்வதைக் காட்டும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தை அடுத்து, நீதிமன்றம் அன்று தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டும், அனைத்தும் பணிகளும் உடனடியாக நிறுத்தப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தன.


குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்த டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவின் குழு தற்போது விசாரணை நடத்தி வருகிறது.  தடயவியல் மற்றும் குற்றவியல் குழுக்கள் சார்பில் வெடிவிபத்துக்கான காரணங்களை திரட்டி வருகின்றனர்.இதுகுறித்து பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் மூத்த அதிகாரி தெரிவிக்கையில், பிடிஎஸ் மற்றும் எஃப்எஸ்எல் நிபுணர்கள் ஆய்வு செய்யும் வரை ஏதையும் உறுதிப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார். 


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண  


 


மேலும் வாசிக்க: Cremation of CDS Bipin Rawat Live: முப்படை தளபதிக்கு உலக நாடுகள் இரங்கல்: இன்று டெல்லி செல்கிறது வீரமரணம் அடைந்தோர் உடல்!


 


Bipin Rawat Demise: ‛3 நாட்கள் துக்கம்... அரசு விழாக்கள் ரத்து... மண்ணின் மைந்தனுக்கு உத்தர்காண்ட் மாநிலம் மரியாதை!