Cremation of CDS Bipin Rawat Live | உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் பிரதமர் மோடி..

இரண்டாவது நாளான இன்று, அது தொடர்பான செய்திகள் மற்றும் அப்டேட்டுகள் உடனுக்குடன் இந்த பகுதியில் வெளியிடப்படும். 

பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன் Last Updated: 09 Dec 2021 09:19 PM
உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் பிரதமர் மோடி..

உயிரிழந்த தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், மற்றும் 11 வீரர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ராஜ்நாத் சிங்

உயிரிழந்த தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், மற்றும் 11 வீரர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ராஜ்நாத் சிங்

உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி

உயிரிழந்த தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், மற்றும் 11 வீரர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி

உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் ராஜ்நாத் சிங்..

உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் ராஜ்நாத் சிங்..

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த எல்.எஸ்.லிடர் உடலை பார்த்து கண்ணீர் சிந்திய அவரது 16 வயது மகள்

மறைந்த பிபின் ராவத், மதுலிகா ராவத்துக்கு அஞ்சலி செலுத்திய மகள்கள்..

மறைந்த பிபின் ராவத், மதுலிகா ராவத்துக்கு அஞ்சலி செலுத்திய மகள்கள்..

மறைந்த பிபின் ராவத், மதுலிகா ராவத் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு..

மறைந்த பிபின் ராவத், மதுலிகா ராவத் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு..

ஹெலிகாப்டர் விபத்து : டெல்லி விமான படை தளத்துக்கு, 13 பேரின் உடல்களின் சென்று சேர்ந்தன

ஹெலிகாப்டர் விபத்து : டெல்லி விமான படை தளத்துக்கு, 13 பேரின் உடல்களின் சென்று சேர்ந்தன

உயிரிழந்த ஒவ்வொரு வீரரின் இறுதி மரியாதைக்கும் மிகவும் கவனமாக ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன - இந்திய ராணுவம்

உயிரிழந்த ஒவ்வொரு வீரரின் இறுதி மரியாதைக்கும் மிகவும் கவனமாக ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன - இந்திய ராணுவம்

பாலம் விமானதளத்தில் 7 .40க்கு சென்றடைகிறது தனி விமானம்.. 8.30 மணிமுதல் ஷ்ரத்த அஞ்சலி நிகழ்வு நடைபெறும் - இந்திய ராணுவம்

அஞ்சலி செலுத்த அனுமதிக்கவில்லை - மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

மறைந்த பிபின் ராவத்துக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்த அனுமதிக்கவில்லை என மத்திய அரசுக்கு, எதிர்க்கட்சிகள் கண்டனம்

அடையாளம் காணமுடியாத உடல்கள் டெல்லி ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் - இந்திய ராணுவம்

அடையாளம் காணமுடியாத உடல்கள் டெல்லி ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் - இந்திய ராணுவம்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து : 3 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன..

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து : 3 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன.. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், பிரிகேடியர் எல். எஸ் லிட்டரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன.

இன்று இரவு 9 மணிக்கு பிபின் ராவத் உடலுக்கு, பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துவார் என தகவல்..

இன்று இரவு 9 மணிக்கு பிபின் ராவத் உடலுக்கு, பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துவார் என தகவல்..

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: டெல்லி கொண்டு செல்லப்பட்டன 13 பேரின் உடல்கள்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: டெல்லி கொண்டு செல்லப்பட்டன 13 பேரின் உடல்கள்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து : ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் விசாரணை

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து : விபத்து நடந்த இடத்தில் ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது..

விபத்தில் உயிரிழந்த வீரர்களை அடையாளம் காணம் உறவினர்களை அழைத்து வர ஏற்பாடு

விபத்தில் உயிரிழந்த வீரர்களை அடையாளம் காணம் உறவினர்களை அழைத்து வர ஏற்பாடு - இந்திய ராணுவம்

உயர் சிகிச்சைக்காக பெங்களூரு ராணுவ மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் வருண் சிங்..

உயர் சிகிச்சைக்காக பெங்களூரு ராணுவ மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் வருண் சிங். 80 சதவிகிதம் தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட வருண் சிங், தற்போது உயர் சிகிச்சைக்காக பெங்களூரு ராணுவ மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அறிவியல் ரீதியில் உடல் அடையாள காணப்படும் - ராணுவம்

உடல்களை அடையாளம் காணப்படுவதில் சிக்கல்; அறிவியல் ரீதியில் உடல் அடையாள காணப்படும் - ராணுவம்

அடையாளம் காணப்பட்ட பின்னர் உடல் ஒப்படைக்கப்படும்

உறவினர்கள் அடையாளம் காணப்பட்ட பின்னரே அவர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும் -  ராணுவம்

இராணுவ வீரர்களின் உடல்களுக்கு மலர் தூவி பொது மக்கள் அஞ்சலி

ராணுவ அதிகாரிகளின் உடல்கள் வருவதை அறிந்த பொதுமக்கள் பல்வேறு இடங்களில் மலர் தூவி ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். மேட்டுப்பாளையம் பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் நின்றிருந்த பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல் தனி விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டுசெல்லப்படுகின்றன

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து : பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல் தனி விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டுசெல்லப்படுகின்றன

ஹெலிகாப்டர் விபத்து : உயிரிழந்த 13 பேரின் உடல்கள் சூலூர் விமானப் படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன

ஹெலிகாப்டர் விபத்து : உயிரிழந்த 13 பேரின் உடல்கள் சூலூர் விமானப் படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன

உடலை கொண்டு சென்ற வாகனம் விபத்து

வெல்லிங்டனில் இருந்து சூலூருக்கு 13 உடல்களை கொண்டு சென்ற வாகனங்களில் ஒரு வாகனம் விபத்துக்கு உள்ளானது. இதனையடுத்து அந்த வாகனத்தில் இருந்த உடல் வேறு வாகனத்திற்கு மாற்றப்பட்டு கொண்ட் செல்லப்பட்டது.

ஹெலிகாப்டர் விபத்து வழக்கு - விசாரணை அதிகாரி நியமனம்

முப்படைகளின் தலைமை தளபதி உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி முத்துமாணிக்கம் நியமனம். முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக பிரிவு 174ன் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

பாதுகாப்பிற்கு சென்ற காவல் துறை வாகனம் விபத்து

பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களை அமரர் ஊர்தியில் எடுத்து சென்றபோது பாதுகாப்பிற்கு உடன் சென்ற பாதுகாப்பு வாகனம் பர்லியார் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் சில காவல் துறையினர் காயமடைந்தனர்.

ஹெலிகாப்டர் விபத்து - காவல் துறையினர் வழக்குப்பதிவு

குன்னூர் அருகே காட்டேரி மலை பாதையில் நச்சப்புராசத்திரத்தின் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு.


இயற்கைக்கு மாறான மரணம் (சட்டப்பிரிவு 174) என்ற பிரிவில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வருண் சிங் பெங்களூரு அழைத்து செல்லப்படுகிறார்?

80 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சையில் இருக்கும் கேப்டன் வருண் சிங்கை உயர் சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்து செல்ல அதிகாரிகள் பரிசீலித்துவருகின்றனர்.

பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்கள் சாலை மார்க்கமாக சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது


சூலூருக்கு கொண்டு செல்லப்படுகின்றன உடல்கள்

வெல்லிங்டன் ராணுவ மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த 13 பேரின் உடல்கள் சாலை மார்க்கமாக சூலூருக்கு தற்போது கொண்டு செல்லப்படுகின்றன.


உடல்கள் கொண்டு செல்லப்படும் வழியில் மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடக்கவிருக்கின்றது. சாலை மார்க்கமாக உடல்கள் கொண்டு செல்லப்படுவதால் கோவை, நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது.


 

நாட்டுப்பற்றுடன் இருப்பதே இறந்தவர்களுக்கு செலுத்தும் அஞ்சலி - தமிழிசை சௌந்தரராஜன்

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “விபத்து தகவல் கேட்டதும் நெஞ்சமே நொறுங்கிவிட்டது. பிபின் ராவத் ஒவ்வொரு நொடியும் நாட்டிற்கு சேவை செய்துள்ளார்.


நாட்டுப்பற்றுடன் நாம் இருப்பதே இறந்தவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலி. இளைஞர்கள் இந்த நேரத்தில் தேசப்பற்றுடன் இருக்க வேண்டும்.


வருண் சிங்கிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஒரு மருத்துவராக சிகிச்சையில் இருக்கும் வருணை நேரில் பார்த்தேன். அவரது உள்ளுறுப்புகள் சீராக செயல்படுகின்றன” என்றார்.

முப்படைகளின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்


13 பேரின் உடல்களுக்கு தமிழிசை அஞ்சலி

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

13 பேரின் உடல்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இறுதி அஞ்சலி

ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெல்லிங்டன் ராணுவ சதுக்கத்தில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையில் அறிக்கை தாக்கல்

ஹெலிகாப்டர் விபத்து குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் அறிக்கை தாக்கல் செய்தார்.

ஹெலிகாப்டர் விபத்து... நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் அளித்த விளக்கம்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். அதில், "உடல்கள் இன்று மாலை டெல்லிக்கு எடுத்தவரப்பட உள்ளன. இறந்தவர்களின் உடல்களுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும்.


விபத்து குறித்து விமான படை தளபதி தலைமையில் விசாரணை தொடங்கியுள்ளது. ஏர் மார்ஷல் மன்வேந்தரா சிங் தலைமையிலான குழு இந்த விசாரணையை நடத்தும். படுகாயமடைந்திருக்கும் வருண் சிங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.

13 பேர் மரணம் - நாடாளுமன்றத்தில் அஞ்சலி, ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல்

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததற்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விபத்து குறித்து அறிக்கையை தாக்கல் செய்தார்.

குடும்பத்தினர் அஞ்சலி

பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு அவர்களது குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்

கே.என். நேரு அஞ்சலி செலுத்தினார்

விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

இறுதி அஞ்சலி நிகழ்வு தொடங்கியது

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த 13 பேரின் உடல்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தொடங்கியது. வெல்லிங்டன் ராணுவ சதுக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவர்களது உடல்களுக்கு முப்படை தளபதிகள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உயரதிகாரிகள் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர்.

13 பேரின் உடல்கள் நாகேஷ் சதுக்கத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் ராணுவ மருத்துவமனையிலிருந்து நாகேஷ் சதுக்கத்திற்கு ராணுவ வாகனத்தில் கொண்டு செல்லப்படுகிறது.

ஹெலிகாப்டர் விபத்து - 11 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்கிறார் ராஜ்நாத் சிங்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் 11 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்கிறார்.

முப்படை தலைமை தளபதியின் உருவ படத்திற்கு ஆளுநர் மரியாதை

மறைந்த முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உருவ படத்திற்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.



ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கிடைத்தது

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி காட்டேரி நச்சப்புராசத்திரத்தில் கண்டெடுக்கப்பட்டது. கருப்பு பெட்டி உள்ளிட்ட 3 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. டெல்லியிலிருந்து வந்த தொழில்நுட்ப குழுவும், வெலிங்டன் ராணுவ மைய குழுவும் இதனை கண்டுபிடித்தது. இந்தக் கருப்பு பெட்டியை பெங்களூரு அல்லது டெல்லிக்கு கொண்டு சென்று ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் தடவியல் துறை ஆய்வு...

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் தடவியல் துறை இயக்குநர் சீனிவாசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு ஆய்வு நடத்தி வருகிறது. தற்போது, 5 அதிகாரிகள் கொண்ட குழு விபத்து நடந்த காட்டேரி பகுதியில் தடயங்களை சேகரித்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

கோவை வந்து சேர்ந்தார் நரவானே

இந்திய ராணுவ தலைமை தளபதி நரவானே கோவை வந்து சேர்ந்தார். டெல்லியிலிருந்து சூலூர் விமானப் படை தளத்திற்கு வந்திருக்கும் அவர் அங்கிருந்து குன்னூர் சென்று உயிரிழந்த 13 பேருக்கு இறுதி மரியாதை செலுத்துகிறார்.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் இறுதியாக பறந்த காட்சிகள்

காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் இறுதியாக பறந்ததை சுற்றுலா பயணி ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். தற்போது அந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.


 


சூலூரில் மூன்றடுக்கு பாதுகாப்பு

13 பேரின் உடல்கள் சூலூருக்கு சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து தனி விமானம் மூலம் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இதன் காரணமாக சூலூரில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராணுவம் சார்பில் தமிழ்நாடு அமரர் ஊர்தி சேவையிடம் கோரிக்கை

13 பேரின் உடல்களை எடுத்து செல்வதற்கு ராணுவம் சார்பில் தமிழ்நாடு அமரர் ஊர்தி சேவையிடம் அமரர் ஊர்தி வாகனங்கள் கேட்கப்பட்டுள்ளன. இதில் 5 வாகனங்கள் உதகமண்டலத்திலிருந்தும், 8 வாகனங்கள் கோவையிலிருந்தும் வரவழைக்கப்படுகின்றன.

பிபின் ராவத் மறைவுக்கு பாகிஸ்தான் இரங்கல்

முப்படைகளின் சார்பில் பிபின் ராவத் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

விபத்து நடந்த இடத்தில் டிஜிபி சைலேந்திர பாபு

ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் விமானப் படை தளபதி வி.ஆர். சௌத்ரியுடன் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவும் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

உயிரழந்தவர்களுக்கு முப்படை தளபதிகள் அஞ்சலி

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேருக்கும் காலை 11 மணியளவில் இறுதி அஞ்சலி நடக்க இருக்கிறது. முப்படை தளபதிகள் வெல்லிங்டன் வந்து தங்களது இறுதி அஞ்சலியை செலுத்த இருக்கின்றனர்.

ஹெலிகாப்டர் விபத்து குறித்து விமானப்படை தளபதி வி.ஆர். சௌத்ரி ஆய்வு..

முப்படைகளின் தலைமைத்தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக காட்டேரி பகுதியில் விமானப்படை தளபதி வி.ஆர். சௌத்ரி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 

விபத்தில் இறந்த ராணுவ வீரர்களின் உடல்களுக்கு ராணுவ மையத்தில் இன்று அஞ்சலி...

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ராணுவ வீரர்களின் உடல்கள் இன்று ராணுவ மையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட இருக்கிறது. இதையடுத்து, ராணுவ வீரர்களின் உடல்களை எடுத்துச் செல்ல மலர் அலங்காரம் செய்யப்பட்ட மூன்று ராணுவ வாகனங்கள் மருத்துவமனை வந்தடைந்தாகவும், சற்று நேரத்தில் ராணுவ வீரர்கள் உடல்கள் ராணுவ பயிற்சி மையத்திற்கு அஞ்சலிக்காக கொண்டுசெல்லப்பட இருக்கிறது. 

தலைமை தளபதி மரணம் - அவசரமாக இந்தியா திரும்புகிறார் துணை தளபதி

பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் நேற்று காலமானதை அடுத்து, ராணுவ துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சண்டி பிரசாத் மொஹந்தி தனது இரண்டு நாள் கத்தார் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்புகிறார்.



உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி - வெல்லிங்டனில் ஏற்பாடுகள் தீவிரம்

13 பேரின் உடல்களும் வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனையிலிருந்து நாகேஷ் சதுக்கத்திற்கு இன்னும் சற்று நேரத்தில் கொண்டு செல்லப்பட இருக்கின்றன. இதற்காக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்று ராணுவ கனரக வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.

பிபின் ராவத்தின் மறைவு வேதனையை ஏற்படுத்தியுள்ளது - தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

குன்னூர் அருகே தமிழ் மண்ணில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து 42 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரும், இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத் தளபதியுமான ஜெனரல் பிபின் ராவத்தின் மறைவு அதிர்ச்சியையும், வேதனையையும் உருவாக்கியுள்ளது என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரில் பிபின் ராவத் உடலும், அவரது மனைவி உடலும் அடையாளம் காணப்பட்ட சூழலில் மற்ற 11 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவு கருகியுள்ளதால் இன்று டி.என்.ஏ பரிசோதனை நடக்கவிருக்கிறது.

கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரம்

விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

அஞ்சா நெஞ்சமும், அளவில்லா வீரமும் கொண்டவர் பிபின் ராவத் - இபிஎஸ், ஓபிஎஸ்

பிபின் ராவத் அஞ்சா நெஞ்சமும், அளவில்லா வீரமும் கொண்ட தேசபக்தர் என அனைவராலும் போற்றப்படுபவர். அவருடன் பயணம் செய்த நம் ராணுவத்தின் மூத்த அதிகாரிகளும் தேசத்திற்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்கள். அவர்களுடைய இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிபின் ராவத் மறைவு - தமிழ்நாடு ஆளுநர் இரங்கல்

முப்படைகளின் முதல் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்த செய்தி கேட்டு  அதிர்ச்சி அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எமது இதயப்பூர்வமான ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

வெல்லிங்டன் வருகிறார் ராஜ்நாத் சிங்

வெல்லிங்டனின் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

பிபின் ராவத் உடலுக்கு முதல்வர் அஞ்சலி

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் உடல் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அஞ்சலி செலுத்த இருக்கிறார். மேலும் அவர் டெல்லி செல்லவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து பகுதியில் விமானப் படை தளபதி ஆய்வு

ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியை விமானப் படை தளபதி வி.ஆர். சௌத்ரி இன்று ஆய்வு செய்யவிருக்கிறார்.

டெல்லி செல்லும் உடல்கள்

ஹெ லிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்று டெல்லி எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்கு பின் நல்லடக்கம் செய்யபப்பட உள்ளது. 

ராணுவ கட்டுப்பாட்டில் விபத்து பகுதி

ஹெ லிகாப்டர் விபத்து நடந்த பகுதியை இந்திய ராணுவம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. அங்கு அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

பிபின் ராவத் மரணம்: பென்டகன் இரங்கல்

முப்படை தளபதி இறப்பிற்கு அமெரிக்காவின் பென்டகன் மாளிகையிலிருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 





அமெரிக்கா இரங்கல்

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவிற்கு, அமெரிக்கா சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது


 

உத்தர்காண்ட் அரசு அறிவிப்பு

 ‛‛பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்ஜியின் மறைவுக்கு இந்தியா முழுவதும் இரங்கல் அலை வீசுகிறது. புனித ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் மூன்று நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதன் போது, அனைத்து அரசு கட்டிடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் இருக்கும், அரசு விழாக்கள் எதுவும் நடத்தப்படாது,’’ என, உத்தர்காண்ட் மாநில முதல்வர் புஷ்கர் மிங் தமி குறிப்பிட்டுள்ளார். 

Background

நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியான பிபின் ராவத் , அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இரண்டாவது நாளான இன்று, அது தொடர்பான செய்திகள் மற்றும் அப்டேட்டுகள் உடனுக்குடன் இந்த பகுதியில் வெளியிடப்படும். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.