அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் இன்று புதுடெல்லியில் நடைபெறும் விமானப் படைத்தளபதிகளின் மாநாட்டில் கலந்து கொள்ளவிருந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் ராஜ்நாத் சிங் தனது இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,591 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில தினங்களாக 10 ஆயிரம் கடந்து பதிவான தினசரி பாதிப்பு இன்று 12 ஆயிரத்தை கடந்து பதிவாகியுள்ளது. இந்தியாவில் மொத்தமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 65,000-ஐ கடந்து பதிவாகியுள்ளது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு அதிகமாக பதிவான தொற்று நிலவரம் ஆகும். இந்தியாவில் மொத்தமாக 65 ஆயிரத்து 286 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டு 4,42,61,476 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,230 ஆக உள்ளது. தொற்றிலிருந்து மீண்டு வருபவர்களின் சதவீதம் 98.67 சதவீதமாக பதிவாகியுள்ளது. இறப்பு விகிதமும் 1.18 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 29 பேர் இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 60,313 லிருந்து 65,286 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 19,398 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து மகாராஷ்டிராவில் – 6102 பேர், தலைநகர் டெல்லியில் 6046 பேர், உத்திர பிரதேசத்தில் – 4298 பேர், தமிழ்நாடு – 3563 பேர், ஹரியானாவில் – 4891 பேர், குஜராத்தில் – 2091 பேர், ஹிமாச்சல் பிரதேசத்தில் – 1672 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 65,286 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 2,30,419 ஆர்டிபிசிஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 6 பேர், மகாராஷ்டிராவில் 4 பேர், உத்திர பிரதேசத்தில் 4 பேர், தமிழ்நாட்டில் 2 பேர், கேரளாவில் 2 பேர், கர்நாடகாவில் 2 பேர் என மொத்தம் 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Election Commission EPS: ‘சின்னமும் என்னுது; கட்சியும் என்னுது’ - பழனிசாமியை பன்னீர் தெளித்து அங்கீகரித்த தேர்தல் ஆணையம்
CM Stalin: முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சிலை: செம அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் - வரவேற்ற பாஜக!