இந்தியாவின் ராணுவம், காவல் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு துறைகளிலும் இன்று பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீவிரவாத அமைப்புகளால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள மிகவும் முக்கியமான தலைவர்களுக்கு மட்டும் இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும். இதுவரை இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் கமாண்டோ பயிற்சி எடுத்தவர்களாக நாட்டிலே மிகவும் சிறந்த வீரர்களாக இருப்பார்கள்.
இதுவரை இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு பணியில் ஆண் கமாண்டோக்கள் மட்டுமே ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு பணியில் பெண் கமாண்டோக்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு பொறுப்பை கண்காணித்து வரும் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 32 பெண் கமாண்டோக்கள் இதற்கான 10 வார சிறப்பு பயிற்சியை கடந்த டிசம்பர் 10-ந் தேதி நிறைவு செய்தனர்.
இந்த பயிற்சியின்போது அவர்கள் வி.ஐ.பி. பாதுகாப்பு கடமைகளை வழங்குதல், நிராயுதபாணியான போர், உடல் பரிசோதனை மற்றும் சிறப்பு ஆயுதப்பயிற்சி ஆகிய பயிற்சிகளை நிறைவு செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது முதற்கட்டமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரது வீடுகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் அனைவரும் வரும் ஜனவரி மாதம் இரண்டாவது வாரம் முழுவதும் தங்களது பணியை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தாண்டு நாட்டில் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 5 மாநிலங்களிலும் தேசிய கட்சிகளின் தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள் என்பதால், அவர்களுக்கான இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு பணியில் பெண் கமாண்டோக்களும் ஈடுபட உள்ளனர்.
நாட்டிலே மிக உயரிய பாதுகாப்பான இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பில் 36 பாதுகாப்பு பணியாளர்கள் ஈடுபடுவார்கள். அவர்களில் 10 என்.எஸ்.ஜி. மற்றும் எஸ்.பி.ஜி. கமாண்டோக்கள் ஈடுபடுவார்கள். மீதமுள்ளவர்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். உயிருக்கு ஆபத்து உள்ள வி.வி.ஐ.பி.க்களுக்கு மட்டுமே இந்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
மேலும் படிக்க : Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மேலும் படிக்க : மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்