5 சதவிகிதத்துக்கும் குறைவாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம், தடுப்பூசி திட்டத்தின் கீழ் அதிக பாதிப்புக்கு ஆளாகக் கூடிய பயனாளிகளில் 70 சதிவிகித பேருக்கு தடுப்பூசி நிர்வகித்த மாவட்டங்களில்  ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது. 



சென்னை positivity rate - 8%


 


மே 31ம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் 718 மாவட்டங்களில் 344 மாவட்டங்களில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் (Positivity Rate) 5%க்கும் குறைவாக உள்ளது. கடந்த மே 7ம் தேதியன்று, வெறும் 92 மாவட்டங்களில் மட்டும் தான் இந்த போக்கு காணப்பட்டது. இந்தியாவில், தினசரி கொரோனா  பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தொடர்ந்து 19வது நாளாக, தினசரி கொரோனா பாதிப்பை விட  குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இதன், காரணமாக குணமடைந்தோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்து தற்போது 92.09 சதவீதமாக அதிகரித்துத்துள்ளது. 


 


 


கடந்த 8 நாட்களாக, தினசரி கொரோனா பாதிப்பு அளவு தொடர்ந்து 10 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. வாராந்திர பாதிப்பு வீதம் 8.64 சதவிகிதமாகவும், இருவார கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் நெகட்டிவாக உள்ளது. 




நேற்று, செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைவர் பல்ராம், " மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு மண்டலங்களில் கடும் கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகளை  செயல்படுத்துவது நன்கு வேலை செய்ததது. ஆனால், இது நிரந்தர தீர்வாக அமையாது. மேலும், தளர்வுகளை அமல்படுத்தும் நெறிமுறைகளையும் நாம் வகுக்க வேண்டும். அனலாக் பணியில் மூன்று தூண்கள் உள்ளன:  தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் (Positivity rate),  கொரோனா ஆபத்துக் கொண்ட பயனாளிகளில் தடுப்பூசி போட்டுக் கொண்டர்களின் விகிதம், கொரோனா சரியான நடத்தை முறையைப் பின்பற்றுவது" என்று தெரிவித்தார்.  


தடுப்பு மருந்து பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை: 


இந்தியாவில் 21 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு  கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


இதில் முதல் கட்டத்தில் தடுப்புமருந்து எடுத்துக்கொண்ட  99 லட்சம்  சுகாதார பணியாளர்கள், இரண்டாவது கட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 68 லட்ச சுகாதார பணியாளர்கள் மற்றும் முதல் முறை தடுப்பு மருந்து பெற்றுக்கொண்ட 2 கோடிக்கும் அதிகமான  முன்கள பணியாளர்கள், இரண்டாவது டோஸ் பெற்றுக் கொண்ட 85 லட்ச முன்கள பணியாளர்கள் அடங்குவர். 




இந்தியாவில், கடந்த ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை,  45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 12 கோடியே 53 லட்சம் பேர் முதல் டோஸும், 2 கோடியே 95 லட்சம் இரண்டாவது கட்ட டோஸும் போட்டுக் கொண்டுள்ளனர்.         


TN Lockdown : இந்த 34 மாவட்டத்தை லாக் பண்ணுங்க : தமிழ்நாட்டுக்கு ஐ.சி.எம்.ஆர். எச்சரிக்கை 


TN Corona Update: தமிழகத்தில் தொற்றாளர்களை விட குணமாவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!