தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக, தினசரி புதிய பாதிப்புகளை விடவும், புதிதாக குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் போக்கு நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 28,864 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டன. அதே சமயம், புதிதாக குணம் அடைவோரின் எண்ணிக்கை 32,982 ஆக இருக்கிறது.
கிட்டத்தட்ட, 12 வாரங்களுக்குப் பிறகு, தமிழகத்தில் தற்போது தான் தினசரி புதிதாக நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கையை விட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
மாநில அளவில் குணம் அடைவோர் விகிதம் 84.08% விழுக்காடாக அதிகரித்துள்ளது. சென்னை, கோயம்பத்தூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம் ஆகிய ஆறு மாவட்டங்களில் இருந்து மட்டும் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
மாநில அளவில் குணமடையும் விகிதத்தை விட 11 மாவட்டங்களில் குணமடையும் விகிதம் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 27 மாவட்டங்களில் குணமடையும் விகிதம் இன்னும் 14 நாட்கள் இடைவெளியில் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
மாவட்டங்கள் | குணமடையும் விகிதம் |
சென்னை | 91% |
செங்கல்பட்டு | 90% |
கடலூர் | 84.3% |
திண்டுக்கல் | 85% |
காஞ்சிபுரம் | 87% |
சேலம் | 85% |
சிவகங்கை | 85% |
திருவள்ளூர் | 90% |
திருநெல்வேலி | 88% |
வேலூர் | 89% |
விழுப்புரம் | 84.9% |
காஞ்சிபுரம் | 87% |
தமிழகத்தைப் பொறுத்தவரையில், பெரம்பலூர் மாவட்டத்தில் குணமடைவோர் விகிதம் மிகக் குறைவாக உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 66 சதவிகிதம் பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில், தற்போது கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,05,546 ஆக இருக்கிறது. அதாவது, தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பில், தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 14.11 % மட்டுமே.
மருத்துவ மேலாண்மை:
தமிகழத்தில் கோயம்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை (39047) அதிகமாக உள்ளது. இதில் 4259 பேர் ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுகையிலும், 776 பேர் தீவிர சிகிச்சைப் பிரவு படுக்கையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலங்கள் | உச்சகட்ட பாதிப்பு கொண்ட மாவட்டங்கள் | சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை |
மகாராஷ்டிரா | புனே | 39,466 |
கேரளா | மல்லப்புரம் | 42,759 |
கர்நாடகா | பெங்களூர் நகர மாவட்டம் | 1,62,625 |
ஆந்திர பிரதேசம் | கிழக்கு கோதாவரி | 31,386 |
மேற்கு வங்கம் | வடக்கு 24 பர்கனா மாவட்டம் | 19,343 |
புனே, மல்லப்புரம் , கிழக்கு கோதாவரி, கோயம்புத்தூர், வடக்கு 24 பர்கனா மாவட்டம் ஆகியவை இந்தியாவின் புறநகர் மாவடங்கள் வரிசையில் உள்ளன. பெங்களூர் நகர மாவட்டம் மிகப்பெரிய மெட்ரோ நகரம். எனவே, கொரோனா இரண்டாவது அலையில், சென்னை, கொல்கத்தா, விசாகப்பட்டணம், மும்பை போன்ற மெட்ரோ நகரங்களை விட புறநகர் மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், வாசிக்க:
கோவையை உலுக்கும் கொரோனா : சென்னையை மிஞ்சிய பாதிப்பு எண்ணிக்கை
Covid-19 Second Wave: குழந்தைகளை வதைக்கும் கொரோனா இரண்டாவது அலை!