கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்துக்கு Mi-17V5 ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. அப்போது கடும் பனிமூட்டம் காரணமாக காட்டேரி மலை பகுதியில் உள்ள மலை முகடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்தனர். 


விபத்தில் சிக்கி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் 80 தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். 


பிபின் ராவத்தின் மறைவுக்கு நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர். பிபின் ராவத்தின் மறைவையடுத்து தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும், அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் பிபின் ராவத் பிறந்த மாநிலமான உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.


முதலில் விபத்தில் உயிரிழந்த 13 பேரின் பெயர்கள் தனித்தனியாக வாசிக்கப்பட்டு அவர்களுக்கு இரு அவைகளில் எம்.பி,க்களின் முன்னிலையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங,  விசாரணையானது ஏர் மார்ஷல் மனவேந்திர சிங் தலைமையில் நடைபெறும். விசாரணை குழு நேற்றே வெல்லிங்டன் சென்று விசாரணையை தொடங்கிவிட்டது என்றார்.


கோயம்புத்தூர் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று காலை 11.48 மணிக்கு Mi-17 V5 ஹெலிகாப்டர் வெலிங்டன் புறப்பட்டது.  மதியம் 12.15 மணிக்கு வெலிங்டனில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 12.08 மணியளவில் சூலூர் விமானப்படை கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு, வெலிங்டனில் தரையிறங்குவதற்கு 7 நிமிடங்களுக்கு முன்னர் குன்னூர் கட்டுப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது சம்பவ இடத்திற்கு விரைந்து பின்னர் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.  


தொடர்ந்து, உடல்கள் இன்று மாலை டெல்லிக்கு எடுத்தவரப்பட உள்ளன. இறந்தவர்களின் உடல்களுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என்றும், விபத்து குறித்து விமான படை தளபதி தலைமையில் விசாரணை தொடங்கியுள்ளது. வருண் சிங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண  


 


மேலும் வாசிக்க: Cremation of CDS Bipin Rawat Live: முப்படை தளபதிக்கு உலக நாடுகள் இரங்கல்: இன்று டெல்லி செல்கிறது வீரமரணம் அடைந்தோர் உடல்!


 


Bipin Rawat Demise: ‛3 நாட்கள் துக்கம்... அரசு விழாக்கள் ரத்து... மண்ணின் மைந்தனுக்கு உத்தர்காண்ட் மாநிலம் மரியாதை!