ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்த நிலையில், கேப்டன் வருண் சிங் மட்டும் காயங்களுடன் உயிர் பிழைத்து வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 


நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில், அடர் பனிமூட்டம் காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்த நிலையில், காட்டேரி என்ற இடத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த நிலையில் பல்வேறு நபர்கள் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 


எனினும் சிகிச்சைப் பலனின்றி, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் மட்டும், படுகாயங்களுடன் வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்


இதுகுறித்து இந்திய விமானப் படை இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில், ’’துரதிர்ஷ்டவசமான இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங், படுகாயங்களுடன் வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  






இந்த விபத்தில் மதுலிக்கா ராவத், பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டெர், லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், குருசேவக் சிங், ஜிதேந்திர குமார், விவேக் குமார், சாய் தேஜா, ஹாவ் சத்பால் உட்படப் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.


மேலும் படிக்க..


Chopper Crash | பிரதமருடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை; விபத்து குறித்து விளக்கியதாகத் தகவல்


Coonoor Chopper Crash | குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழப்பு; ஆண் ஒருவருக்குத் தீவிர சிகிச்சை


Military Plane Crashes | இரண்டு வருடங்களில் 7...சமீப ஆண்டுகளில் நடந்த படுபயங்கர ராணுவ விமான விபத்துக்களின் பட்டியல்..


Coonoor Chopper Crash | முப்படை தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்து... முதலில் நேரில் பார்த்தவர் என்ன சொல்கிறார்?


Chopper Crash Ooty LIVE: குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: தலைமை தளபதி பிபின் ராவத் குடும்பத்துடன் பயணித்தாக தகவல்!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்