Coonoor Chopper Crash LIVE: உயிரிழந்த தலைமை தளபதி பிபின் ராவத் : டிசம்பர் 10-ஆம் தேதி இறுதிச்சடங்கு..
Coonoor Chopper Crash LIVE:மாவட்ட ஆட்சியர் மற்றும் ராணுவ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் அடர்ந்த மேக மூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் வழிதவறி இந்த விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது
உயிரிழந்த தலைமை தளபதி பிபின் ராவத் : டிசம்பர் 10-ஆம் தேதி இறுதிச்சடங்கு..
வெல்லிங்டன் சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்..
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இடத்தில் அடுத்து யாரை நியமிக்கலாம் என ஆலோசனை நடைபெறுவதாக தகவல்
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழப்புக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை விமான நிலையத்தில் இருந்து முதல்வர் முக ஸ்டாலினுடன் குன்னூர் செல்பவர்கள்..
K.N.நேரு, இறையன்பு, சைலேந்திரபாபு, உதயசந்திரன், டேவிட்சன், தினேஷ்குமாா், நிதின் ஜான், சதீஷE.V.வேலு.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து - குன்னூர் புறப்பட்டார் முதலமைச்சர் முக ஸ்டாலின்
பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் மோடி இன்று மாலை 6.30 மணிக்கு முக்கிய ஆலோசனை
பிபின் ராவத் இல்லத்தில் அவரின் மகளை சந்தித்தார் ராணுவ தளபதி நரவனே
ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 13 பேர் பலி - சிகிச்சையில் ஒருவர்
தலைநகர் டெல்லியில் உள்ள பிபின் ராவத் இல்லத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றுள்ளார் - பிபின் ராவத் குடும்பத்தினரை சந்தித்து பேசினார்
சம்பவ இடத்துக்கு நீலகிரி ராணுவ அதிகாரிகள் விரைந்துள்ளனர். 80 சதவீதத் தீக்காயங்களுடன் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சில உடல்கள் சம்பவம் நடந்த இடத்தில் உள்ளன. உடல்களை மீட்டு அவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடையாளங்களை சரிபார்க்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன
முப்படைகளின் தலைமைத்தளபதி பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை நடத்த விமானப்படை உத்தரவிட்டுள்ளது.
கோவை சூலூரில் இருந்து குன்னூர் வெலிங்கடன் பயிற்சி மையத்திற்கு ராணுவ அதிகாரிகள் சென்றுபோது விபத்து
மாவட்ட ஆட்சியர், ராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தற்போது மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணியில் 4 உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், ராணுவ தரப்பில் இருந்து இன்னும் அதிகாரபூர்வ தகவல் வெளியிடவில்லை.
காட்டேரி என்ற இடத்தில் நடந்த விபத்தில் 14 பேர் பயணித்ததாகவும், 2 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அதில் பயணித்த ராணுவ உயரதிகாரி நிலைமை என்ன ஆனது என்பது குறித்து இதுவரை தெரியவில்லை என நீலகிரி ஆட்சியர் அம்ரித் தகவல் தெரிவித்துள்ளார்.
Background
Coonoor Chopper Crash LIVE Updates
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் ராணுவ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் அடர்ந்த மேக மூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் வழிதவறி இந்த விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ராணுவ உயர்அதிகாரி ஒருவர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -