கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார். அவருடன் ராகுல் காந்தி  மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரும் செல்கின்றனர்.


வெளிநாடு பயணம்:


இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளதாவது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவுள்ளதாகவும், வெளிநாட்டில் சிகிச்சை முடித்துவிட்டு, இத்தாலியில் உள்ள தனது தாயாரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் சோனியா காந்தி எந்த நாட்டிற்கு சிகிச்சைக்காக செல்லவுள்ளார் என உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.






காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 3 முறை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டார். டெல்லியில் அடுத்த மாதம் 4-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உடல்நலம் பாதிப்பு காரணமாக பொதுமக்களை சந்திப்பதையும் சோனியா காந்தி குறைத்து கொண்டார். இதையடுத்து உடல்நலத்தில் கவனம் செலுத்தும் வகையில், சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு சோனியா காந்தி செல்கிறார்.






காங்கிரஸ் பொதுக்கூட்டம்:


காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து, ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை தொடர்ந்து, காங்கிரசின்  இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், அடுத்த மாதம் 4-ஆம் தேதி காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ராகுல் காந்தியே, தலைவராக பொறுப்பேற்க வேண்டும் எனவும், ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். சோனியா காந்தி சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ள நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பாரா என சந்தேகம் எழும்பியுள்ளது. 


Also Read: பிரம்மோஸ் ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தானுக்குள் ஏவப்பட்ட விவகாரம் தொடர்பாக மூன்று அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் பணி நீக்க உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.