Axiom 4 Splashdown Shubhanshu Shukla: சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட ஆக்சியம் 4 குழு,  எங்கு? எப்போது? தரையிறங்கும் என்ற தகவல்கள் இந்த தொகுப்பில் அறியலாம்.

பூமிக்கு திரும்பும் ஆக்சியம் 4 குழு:

இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் அடங்கிய குழு, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்பும் தங்கள்ளது பயணத்தை திங்களன்று தொடங்கினர். அனைத்து பணிகளும் திட்டமிட்டபடி நடைபெற்றால், டிராகன் விண்கலம் ஆனது பூமியின் சுற்றுவட்டப்பாதைக்குள் மீண்டும் நுழைந்து கலிபோர்னியாவில் உள்ள பசிபிக் கடலில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.01 மணிக்கு தரையிறங்கும். இதுதொடர்பாக வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, டிரகான் விண்கலம் கடலில் தரையிறங்குவது தொடர்பான நேரடி ஒளிபரப்பு ஆக்சியம் ஸ்பேஸ் வெப்சைட் எனும் தளத்தில் பிற்பகல் 2 மணியளவில் தொடங்க உள்ளது. நாசாவின் சமூகவலைதள கணக்கிலும் இதன் நேரலையை காண முடியும் என கூறப்படுகிறது.

பூமியை நோக்கி 22 மணி நேர அதிவேக பயணம்:

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விணகலமானது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள, ஹார்மோனி அமைப்பில் இடம்பெற்றுள்ள ஸ்பேஸ் ஃபேஷிங் போர்டிலிருந்து இந்திய நேரப்படி திங்கட்கிழமை மாலை 4.45 மணி அளவில் பூமியை நோக்கி புறப்பட்டது. இதில் சுபான்ஷு சுக்லா, கமேண்டர் பெக்கி விஸ்டன், மிஷன் நிபுணர்கள் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி மற்றும் திபோர் கபு ஆகிய ஆக்சியம் 4 குழுவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பயணித்துக் கொண்டுள்ளனர். சுமார் 22 மணி நேரம் அதிவேகமாக பயணித்து அவர்கள் பூமியை அடைய உள்ளனர். டிராகன் விணகலமானது புவியின் வளிமண்டலத்திற்குள நுழையும் வரையில் மணிக்கு 28 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்திலும், நுழைந்த பிறகு மணிக்கு 32 கிலோ மீட்டர் வேகத்திலும் பயணிக்கும்.

சரித்திரம் படைத்த சுபான்ஷு சுக்லா:

அடுத்தடுத்து 7 முறை ஏற்பட்ட தடங்களை கடந்து, ஒருவழியாக கடந்த ஜுன் மாதம் 25ம் தேதி ஆக்சியம் 4 குழுவினர் பூமியிலிருந்து விண்வெளிக்கு புறப்பட்டனர். திட்டமிட்டபடி மறுநாள் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர். இதன் மூலம், அந்த இடத்தை அடைந்த முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றார். அதைதொடர்ந்து சுமார் 20 நாட்கள் நீடித்துள்ள இந்த பயணத்தில், 60-க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வுகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட வெளிநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இஸ்ரோ தகவல்களின்படி, விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா ஏழு நுண் ஈர்ப்பு சோதனைகளையும் பிற திட்டமிடப்பட்ட செயல்பாடுகளையும் வெற்றிகரமாக முடித்து, பணியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைந்துள்ளார். இது, விரைவில் மனிதனை விண்வெளிக்கு அனுப்ப உள்ள, இஸ்ரோவின் முயற்சிக்கான பல்வேறு தரவுகளை வழங்கும் என நம்பப்படுகிறது. 

இதனிடையே, சுபான்ஷுவின் வருகையை அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவும் மிகவும் ஆர்வமுடன் எதிர்நோக்கி உள்ளது.