டிச.15ஆம் தேதி முதல் 9, 11ஆம் வகுப்புகளுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:


''டிசம்பர் 15ஆம் தேதி முதல் 9, 11ஆம் வகுப்புகளுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்க உள்ளது. இதில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே 2022- 23ஆம் ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்பதால் பள்ளிகள் கவனத்துடன் தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும்.


சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்னர், முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். பள்ளிகள் ஏற்கெனவே தங்களிடம் உள்ள அங்கீகார எண்ணை, பயனர் எண்ணாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் புதிதாக அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளிகள், OASIS தளத்தில் தங்களின் தகவல்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். 


அந்தத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் வகுப்பு, மாணவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை மாற்ற எதிர்காலத்தில் அனுமதி வழங்கப்படாது என்பதால், அவற்றை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். புதிய பள்ளிகள் தங்களுக்கான பயனர் எண்ணையும் கடவுச் சொல்லையும் பெற சம்பந்தப்பட்ட பிராந்திய அலுவலகத்தைத் தொடர்புகொள்ள வேண்டும். 


கூடுதல் தகவல்களுக்கு: cbse.nic.in.


இவ்வாறு சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்