Kris Gopalakrishnan : ஹனி ட்ராப் விவகாரம்! இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் மீது வழக்குப்பதிவு

Kris Gopalakrishnan : இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் மீது 16 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Continues below advertisement

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஸ் கோபாலகிருஷ்ணன், முன்னாள் ஐஐஎஸ்சி இயக்குநர் பலராம் உள்பட 16 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Continues below advertisement

எதற்காக வழக்கு? 

பழங்குடியின போவி சமூகத்தைச் சேர்ந்த புகார்தாரர் துர்கப்பா, இந்திய அறிவியல் கழகத்தில் (IISc) நிலையான தொழில்நுட்ப மையத்தில் ஆசிரியராக இருந்தார்.

2014 ஆம் ஆண்டில், தன்னை ஒரு ஹனி ட்ராப் வழக்கில் பொய்யாக இணைத்து, பின்னர் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக அவர் புகார் கூறினார். மேலும் சாதிய துஷ்பிரயோகம் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு ஆளானதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். 

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் 71வது நகர சிவில் மற்றும் அமர்வு நீதிமன்றத்தின் (சிசிஎச்) உத்தரவின்படி சதாசிவ நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களில் கோவிந்தன் ரங்கராஜன், ஸ்ரீதர் வாரியர், சந்தியா விஸ்வேஸ்வரா, ஹரி கேவிஎஸ், தாசப்பா, பலராம் பி, ஹேமலதா மிஷி, சட்டோபாத்யாயா கே, பிரதீப் டி சவுகர் மற்றும் மனோகரன் ஆகியோர் அடங்குவர்.

இதையும் படிங்க: FHI Rankings: ”நிதி ஆரோக்கியம்” போட்டுக் கொடுத்த மத்திய அரசு, டாப் 10ல் கூட இல்லாத தமிழ்நாடு, அப்ப வளர்ச்சி?

யார் இந்த கிரிஸ் கோபாலகிருஷ்ணன்?

 கிரிஸ் கோபாலகிருஷ்ணன் இன்ஃபோசிஸின் இணை நிறுவனர்களில் ஒருவர். அவர் 2011 முதல் 2014 வரை நிறுவனத்தின் துணைத் தலைவராகவும், 2007 முதல் 2011 வரை இன்ஃபோசிஸின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றினார்.

இதையும் படிங்க: Chief Election Commissioner: இனிமே இப்படி தான்..! புதிய தலைமை தேர்தல் ஆணையர் யார்? தேடுதல் குழு அமைப்பு

இந்திய அரசாங்கம் கோபாலகிருஷ்ணனுக்கு நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷன் விருதை ஜனவரி 2011 இல் வழங்கியது.கோபாலகிருஷ்ணன் 2013-14 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் உச்ச தொழில்துறை கூட்டமைப்பு (CII) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் ஜனவரி 2014 இல் டாவோஸில் உலக பொருளாதார மன்றத்தின் இணைத் தலைவர்களில் ஒருவராக பணியாற்றினார்.

IISc ஆசிரியர்களிடமிருந்தோ அல்லது IISc அறங்காவலர் குழுவின் உறுப்பினர்களிடமிருந்தும் அல்லது  கிரிஸ் கோபாலகிருஷ்ணனிடமிருந்தும் இது வரை எந்த விளக்கமும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola