✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Justice Abhijit Gangopadhyay: ராஜினாமா செய்த நீதிபதி பாஜக இணையவுள்ளதாக அறிவிப்பு - ஏன் ராஜினாமா? நடந்தது என்ன?

செல்வகுமார்   |  05 Mar 2024 04:02 PM (IST)

கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் இணையவுள்ளதாக அறிவித்தார்.

முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய்

கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த  அபிஜித் கங்கோபாத்யாய், 2 நாட்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று காலை தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் கல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு அனுப்பினார்.

ராஜினாமா ஏன்?:

இதுகுறித்து அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கையில், மேற்குவங்க மாநில டி.எம்.சி. அரசாங்கத்துடன் முரண்பாடு இருந்த காரணத்தால், நீதிபதி பதவியை அபிஜித் ராஜினாமா செய்தததாக கூறப்படுகிறது. 

மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரி யர் நியமனத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வழக்கானது நீதிமன்றத்துக்கு வந்தது. இந்த வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மேலும் தொலைக்காட்சிகளில் நேரடியாகவும் மேற்குவங்க அரசை எதிர்மறையாக விமர்சித்து பேட்டியளித்தார். இதையடுத்து, நீதிபதியாக இருக்கும் நபர், இதுபோன்று பேட்டியளிக்க கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து, திரிணாமுல் அரசுக்கும் முன்னாள் நீதிபதி அபிஜித்க்கும் முரண்பாடு எழ ஆரம்பித்தது.  ராஜினாமா குறித்து தெரிவித்த அபிஜித் கங்கோபாத்யாய், மேற்கு வங்கத்தில் எனக்கு மிகவும் சவாலாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நன்றி, அவர்களால்தான் எனது அரசியல் பயணம் தொடங்குகிறது.

அரசியல் குறித்து தெரிவிக்கையில், ”மேற்கு வங்கத்தில் எனக்கு மிகவும் சவாலாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நன்றி, அவர்களால்தான் எனது அரசியல் பயணம் தொடங்குகிறது. ஊழல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எதிர்த்துப் போராடும் தேசியக் கட்சியான  பாரதிய ஜனதா கட்சியில் வரும் 7ஆம் தேதி சேரப் போகிறேன்” என  தெரிவித்தார்.

நீதிபதி கங்கோபாத்யாய் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் பணிக்காலம் நிறைவடைந்து ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Nadda Resignation: பரபரப்பு.. எம்.பி. பதவியை ராஜினாமா செய்த பாஜக தேசிய தலைவர் நட்டா.. அடுத்து என்ன?

Also Read: Power Pages-5: பிறந்த இடத்தில் தோல்வி; 3 முறை பிரதமர்; 2 முறை ஆட்சி கவிழ்ப்பு: தெரியுமா வாஜ்பாய் வரலாறு

Published at: 05 Mar 2024 03:48 PM (IST)
Tags: BJP Calcutta High Court Abhijit Gangopadhyay judge Abhijit Gangopadhyay
  • முகப்பு
  • செய்திகள்
  • இந்தியா
  • Justice Abhijit Gangopadhyay: ராஜினாமா செய்த நீதிபதி பாஜக இணையவுள்ளதாக அறிவிப்பு - ஏன் ராஜினாமா? நடந்தது என்ன?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.