குண்டும் குழியுமான சாலையில் மணப்பெண் ஃபோட்டோஷூட்..! இப்படியும் ஒரு எதிர்ப்பு!!
புது மணப்பெண் சுஜீஷாவின் இந்தப் புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து இவர்களது சமூக அக்கறை மிகுந்த இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

கேரள மணப்பெண் ஒருவர் தன் ஊரின் குண்டும் குழியுமான சாலைகளில் நடத்திய நூதன ஃபோட்டோஷூட் போராட்டம் பேசுபொருள் ஆகியுள்ளது.
கேரள மாநிலம், நிலம்பூர் அருகே உள்ள பூக்கோட்டு பாலத்தைச் சேர்ந்தவர் சுஜீஷா(வயது 23). இவருக்கு இன்று (செப்.20) காலை திருமணம் நடைபெற்றது.
Just In




இவரது சொந்த ஊரான நிலம்பூரின் குண்டு குழிகள் நிறைந்த சாலைகளால் அப்பகுதி மக்கள் பல நாள்களாக அவதிப்பட்டு வந்துள்ளனர். அப்பகுதி மக்கள் பலமுறை கண்டித்தும் இதுகுறித்து அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், சுஜீஷா திருமணத்துக்கு புக் செய்திருந்த போட்டோகிராஃபி நிறுவனம் முன்னதாக ஒரு நூதனப் போராட்ட ஐடியாவை வழங்கியுள்ளது.
அதன்படி, சுஜீஷா புக் செய்த ஏரோ வெட்டிங் கம்பெனி (Arrow wedding company) எனும் நிறுவனத்தைச் சேர்ந்த போட்டோகிராஃபர் ஆஷிக், இந்த உடைந்த சாலைகளில் நின்று மணப்பெண்ணை புகைப்படங்கள் எடுத்து நூதன முறையில் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கு சம்மதம் தெரிவித்த மணப்பெண் சுஜீஷாவை குண்டும் குழியுமான இந்த சாலைகளில் புகைப்படங்கள் எடுத்து ஏரோ வெட்டிங் ஃபோட்டோகிராஃபி நிறுவனம் முன்னதாக தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டது.
புது மணப்பெண் சுஜீஷாவின் இந்தப் புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து இவர்களது சமூக அக்கறை மிகுந்த இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.