10 Rupee Coin: பத்து ரூபாய் நாணயத்தை செல்லாது என சொன்னால் தண்டனையா? - RBI சொல்வது என்ன?

10 Rupee Coin: பத்து ரூபாய் நாணையங்களை செல்லாது எனச் சொன்னால், அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

Continues below advertisement

10 Rupee Coin: தமிழகத்தில் உள்ள ஒரு சிறப்பு நடைமுறை என்றால் அது, சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டும் 10  ரூபாய் நாணயங்கள் செல்லும். அதுவே இந்த மாவட்டங்களைக் கடந்து மற்ற மாவட்டங்களுக்குச் சென்றால், இந்த பத்து ரூபாய் நாணையங்கள் செல்லாது என பலர் நினைக்கின்றனர். பத்து ரூபாய் நாணையத்தினை ஏதோ ஒரு தடை செய்யப்பட்ட பொருளைப் பார்ப்பது போல பொது மக்கள் பார்ப்பது வழக்கமாக இருக்கிறது. இது தவிர பொது மக்களிடம் நேரடியாக பண பரிவர்த்தணையை மேற்கொள்ளும், போக்குவரத்து துறை, வங்கிகள், மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களான ரயில் நிலையம், தபால் நிலையம் போன்ற அலுவலங்களில் கூட பத்து ரூபாய் நாணயங்கள் மதிக்கப்படுவது இல்லை. மேலும், பொது மக்கள் மத்தியிலும் பத்து ரூபாய் நாணயத்தின் புழக்கம் என்பதும் இல்லை. மேலும், பத்து ரூபாய் நாணயங்கள் செல்லக்கூடிய மாவட்டங்களுக்கு வரக்கூடிய வெளி மாவட்டகாரர்களிடம், பத்து ரூபாய் நாணயத்தினை வழங்கினால், வாங்க மறுப்பதும், இங்கு எல்லாம் செல்லும் எனச் சொன்னாலும், வாங்க மறுப்பதும் பொது இடங்களில் அவ்வப்போது நடந்து வருகிறது. 

Continues below advertisement

நாணயங்கள் பொதுவாக நீண்ட நாள் புழக்கத்திற்காக அரசால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. இதில் ஏற்கனவே, ஒரு ரூபாய் நாணயங்கள், இரண்டு ரூபாய் நாண்யங்கள், ஐந்து ரூபாய் நாணயங்கள் அரசால் வெளியிடப்பட்டு புழக்கத்தில் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2005 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்து ரூபாய் நாணயத்தினை வெளியிட்டது. இதில், இதுவரை இந்திய அரசு, ஒரு சில சிறப்பு தினங்களை அங்கீகரிக்கும் விதமாகவும் சிறப்பு நாணயங்களையும் வெளியிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளது.   அவ்வகையில் இதுவரை 14 வகையான பத்து ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

இவ்வாறு 14 வகையாக வெளியிடப்பட்டுள்ள பத்து ரூபாய் நாணயங்களால் மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டு புழங்குவதற்கு அச்சத்தினை ஏற்படுத்தியது. மேலும், புழக்கத்திற்கு அச்சம் ஏற்பட்டவுடன் அரசு தரப்பில் இருந்தும் சரியான விளக்கம் தரப்படவில்லை. மிகவும் தாமதமாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சத்தினை போக்க, இந்தியன் ரிசர்வ் வங்கி தரப்பில் பல்வேறு நடவெடிக்கைகள் எடுக்கப்பட்டதோடு  அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளது. மேலும், விழிப்புணர்வு பிரசாரங்களையும் நடத்தின. இவை மட்டுமில்லாமல், மக்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பியும் விழிப்புணர்வினை ஏற்படுத்தியது. ஆனாலும், மக்கள் மத்தியில் இருந்த அச்சம் தொடர்ந்து இருக்கச் செய்கிறதுது. அது இன்று வரை நீடிக்கிறது. 

10 ரூபாய் நாணயங்களை பற்றி சந்தேகத்துடன் வரும் மக்களுக்கு புரிய வைக்க வங்கிகளுக்கு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்த பத்து ரூபாய் நாணயங்கள் குறித்து பொது மக்கள் தங்களுக்கு உள்ள சந்தேகங்களை 14440 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு சந்தேகங்களை போக்கிக் கொள்ளலாம். மேலும், https://www.rbi.org.in/ என்ற இணையதளத்திலும் இந்திய ரூபாய்கள் தொடர்பாக படித்தும் தெரிந்துக்கொள்ளலாம்.

செல்லாதுனு சொன்னா சிறை

ஆனால், பத்து ரூபாய் நாணயங்களை யாரேனும் வாங்க மறுத்தாலோ, செல்லாது எனச் சொன்னாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதாவது, இந்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்களை, கடைகளை, அலுவலர்கள் மீது புகார் அளித்தால், இந்திய தண்டனைச் சட்டம் 124 பிரிவு ‘அ’ வின் படி வாங்க மறுத்தால் அது குற்றம். எனவே, இந்த குற்றத்திற்கு மூன்று வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். 

Continues below advertisement